ஒரு ரூபாய்க்கு அரிசி, கோதுமை, உப்பு… ரூ.1.50க்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்… சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

ஒரு ரூபாய்க்கு அரிசி, கோதுமை, உப்பு… ரூ.1.50க்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்… சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கோவிட்-19 பரவலுக்கு மத்தியில் அம்மாநில அரசு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் குறைந்தபட்ச விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மத்திய பிரதேச அரசின் இந்த அறிவிப்பு பாமர மக்களிடம் பலத்த வரவேற்பு பெற்றுள்ளது.

ஒரு ரூபாய்க்கு அரிசி, கோதுமை, உப்பு… ரூ.1.50க்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்… சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இது தொடர்பாக வீடியோ கான்பரன்சிங்கில் கூறியதாவது: வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல், குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) இல்லாத ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினருக்கும், கோதுமை, உப்பு மற்றும் அரிசி ஒரு ரூபாய்க்கும், ஒரு குடும்பத்துக்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.1.50க்கும் வழங்கப்படும். மேலும், கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்கள் ஒரு ரூபாய்க்கு நவம்பர் வரை வழங்கப்படும்.

ஒரு ரூபாய்க்கு அரிசி, கோதுமை, உப்பு… ரூ.1.50க்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்… சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

ஒரு நபருக்கு 10 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும், ஒரு குடும்பத்தில் 5 உறுப்பினர்கள் இருந்தால் அந்த குடும்பத்துக்கு 50 கிலோ ரேஷன் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் இந்த அறிவிப்பை முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் அடுத்த சில மாதங்களில் 25க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.