இலாகா ஒதுக்குவது முதல்வரின் உரிமை… யாரும் தலையிடக் கூடாது.. சிந்தியாவுக்கு குட்டு வைத்த பா.ஜ.க. எம்.பி.

இலாகா ஒதுக்குவது முதல்வரின் உரிமை… யாரும் தலையிடக் கூடாது.. சிந்தியாவுக்கு குட்டு வைத்த பா.ஜ.க. எம்.பி.

மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவால் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. இதற்கு கைமாறாக ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவியை பா.ஜ.க. கொடுத்தது. மேலும், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கடந்த 2ம் தேதியன்று அமைச்சரவை இரண்டாவது முறையாக விரிவாக்கம் செய்த போது 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதில் சிந்தியாவின் ஆதரவாளர்கள் 12 பேரும் அடங்குவர்.

இலாகா ஒதுக்குவது முதல்வரின் உரிமை… யாரும் தலையிடக் கூடாது.. சிந்தியாவுக்கு குட்டு வைத்த பா.ஜ.க. எம்.பி.

அமைச்சரவை விரிவாக்கம் செய்து ஒரு வாரம் தாண்டி விட்ட நிலையில், இன்னும் புதிய அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. சிந்தியா தனது ஆதரவாளர்களுக்கு குறிப்பிட்ட துறைதான் வேண்டும் என முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானிடம் வற்புறுத்துவதால் துறை ஒதுக்கீடு தாமதம் ஆகுவதாக செய்தி வெளியானது. அந்த செய்தி உண்மைதான் என்பதை உறுதி செய்வது போல், பா.ஜ.க. எம்.பி. கணேஷ் சிங் அறிக்கை அமைந்துள்ளது.

இலாகா ஒதுக்குவது முதல்வரின் உரிமை… யாரும் தலையிடக் கூடாது.. சிந்தியாவுக்கு குட்டு வைத்த பா.ஜ.க. எம்.பி.

சாட்னா தொகுதி பா.ஜ.க. எம்.பி. கணேஷ் சிங் கூறுகயைில், தாமதம் தேவையில்லாதது மற்றும் மக்களுக்கு நல்ல செய்தி அனுப்பவில்லை. ஜோதிராதித்ய சிந்தியா மாநில அரசியலில் உயரமான இடத்தில் உள்ளார். கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை மிகவும் மதிக்கிறார்கள். இலாகாக்கள் ஒதுக்கீடு தாமதத்திற்கு காரணம் அவர்தான் காரணம் என்றால் அவர் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். சிவ்ராஜ் சிங் சவுகானின்கீழ், ஒரு நல்ல அரசாங்கத்தை வேலையில் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள். துறைகள் ஒதுக்கீடு செய்வது முதல் அமைச்சரின் சிறப்புரிமை. அதில் யாரும் தலையிடக்கூடாது. சிவ்ராஜ் சிங் சவுகான் தனது மூன்று பதவி காலங்களிலும் மத்திய பிரதேசத்தை வளர்ச்சிக்கான பாதையில் கொண்டு வந்தார். இந்த விவகாரத்தில் முதல்வரை நம்ப வேண்டும் என தெரிவித்தார்.