நான் இப்பம் கோவிட் தடுப்பூசி போட்டுக்க மாட்டேன்… மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதி

நான் இப்பம் கோவிட் தடுப்பூசி போட்டுக்க மாட்டேன்… மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதி

நான் இப்போது கோவிட் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பூசி போடும் திட்டத்தை நம் நாடு விரைவில் தொடங்க உள்ளது. இந்த சூழ்நிலையில் கோவிட்-19 தடுப்பூசியை மக்களுக்கு போடுவது தொடர்பாக, மத்திய பிரதேசத்தில் அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அம்மாநில மூத்த அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். அப்போது முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அதிகாரிகளிடம் கூறியதாவது:

நான் இப்பம் கோவிட் தடுப்பூசி போட்டுக்க மாட்டேன்… மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதி
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

நான் இப்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். முதலில் தடுப்பூசி மற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதன் பிறகு எனது முறை வர வேண்டும். முன்னுரிமை குழுக்களுக்கு (மருத்துவ, சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட கொரோனா வாரியர்ஸ்) தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த நாம் பணியாற்ற வேண்டும்.

நான் இப்பம் கோவிட் தடுப்பூசி போட்டுக்க மாட்டேன்… மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதி
கோவிட்-19 தடுப்பூசி

தடுப்பூசி இயக்கத்துக்கு பாதுகாப்பான செயல்முறையை தயார் செய்யுங்க. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்தியாவில் அவசர காலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று பல மாநிலங்கள் பெரிய தடுப்பூசி இயக்கத்துக்காக செயல்படுத்துவதற்காக தயார் சோதனைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.