பாகிஸ்தானும், ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளும் இந்து பெண்களை மதமாற்றம் செய்ய சதி… மத்திய பிரதேச சபாநாயகர்

 

பாகிஸ்தானும், ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளும் இந்து பெண்களை மதமாற்றம் செய்ய சதி… மத்திய பிரதேச சபாநாயகர்

பாகிஸ்தானும், ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளும் இந்து பெண்களை மதமாற்றம் செய்ய சதி செய்கிறார்கள் என்று மத்திய பிரதேச சபாநாயகர் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு, அதிகரித்து வரும் லவ் ஜிஹாத் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தர்ம ஸ்வதந்த்ரிய (மத சுதந்திரம்) மசோதா 2020 தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார்.

பாகிஸ்தானும், ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளும் இந்து பெண்களை மதமாற்றம் செய்ய சதி… மத்திய பிரதேச சபாநாயகர்
சபாநாயகர் ரமேஷ்வர் சர்மா

இந்த மசோதா, ஒரு நபரை மோசடி மூலம் கவர்ந்திழுப்பதற்கும், மத மாற்றத்தால் திருமணத்தை கட்டாயப்படுத்துவதற்கும் 5 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கிறது. மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது என தகவல். இந்த சூழ்நிலையில் தர்ம ஸ்வதந்த்ரிய (மத சுதந்திரம்) மசோதா 2020-க்கு ஆதரவாக மத்திய பிரதேச புரோடெம் சபாநாயகர் ரமேஷ்வர் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானும், ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளும் இந்து பெண்களை மதமாற்றம் செய்ய சதி… மத்திய பிரதேச சபாநாயகர்
லவ் ஜிகாத்

இது தொடர்பாக ரமேஷ்வர் சர்மா கூறுகையில், பாகிஸ்தானும், ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளும் இந்து பெண்களை மதமாற்றம் செய்ய சதி செய்கிறார்கள். சீதா ரூபியாவதற்கு எவ்வளவு காலம் அனுமதிப்போம், சீதாவை எவ்வளவு காலம் இறக்க அனுமதிப்போம்? நர்கிஸ், சுனில் தத் போன்ற உண்மையான அன்பை எனக்குக் காட்டுங்கள். எத்தனை நர்கிஸ் எத்தனை சுனில் தத்தை மணந்தார்கள் என்று சொல்லுங்கள் என்று அவர் தெரிவித்தார். மறைந்த பாலிவுட் நடிகை நர்கிஸ், இந்து மதத்தை சேர்ந்த நடிகர் சுனில் தத்தை காதல் திருமணம் செய்து கொண்டார். அதனை குறிப்பிட்டுதான் எத்தனை நர்கிஸ் சுனில் தத்தை மணந்தார்கள் என்று சபாநாயகர் கேள்வி கேட்டுள்ளார்.