”இந்தியாவிலேயே ஆண்டிராய்ட் 10ல் இயங்கும் முதல் டிவி” – மோட்டோரோலா அறிமுகம்

 

”இந்தியாவிலேயே ஆண்டிராய்ட் 10ல் இயங்கும் முதல் டிவி” – மோட்டோரோலா அறிமுகம்

ஆண்டிராய்ட் 10 இயங்குதளத்தில் இயங்கும் இந்தியாவின் முதல் டிவி ரகங்களை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ரெவோ மற்றும் இசட் எக்ஸ் 2 ஆகிய பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டிவிக்கள், 32 இன்ச், 40 இன்ச், 43 இன்ச் மற்றும் 55 இன்ச் ஆகிய 4 வகை அளவுகளில் வெளிவந்துள்ளன. இதில் இசட் எக்ஸ் 2 என்ற பெயரில் 32 மற்றும் 40 இன்ச் டிவிக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் 32 இன்ச் டிவி எச்டி ரெடி ரெசல்யூசனுடன், 13,999 என்ற விலைக்கும், 40 இன்ச் டிவி ஃபுல் எச்டி ரெசல்யூசனுடன் 19,999க்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

”இந்தியாவிலேயே ஆண்டிராய்ட் 10ல் இயங்கும் முதல் டிவி” – மோட்டோரோலா அறிமுகம்

அதே சமயம், ரெவோ பெயரில் 43 இன்ச் மற்றும் 55 இன்ச் டிவிக்கள் 4கே ரெசல்யூசனுடன் முறையே 30,999 ரூபாய் மற்றும் 40,999 ரூபாய்க்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து டிவிக்களும், பிளிப்கார்ட்டில் வரும் 15ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது, பிளிப்கார்டின் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையை முன்னிட்டு கல்லா கட்ட இந்த டிவிக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

”இந்தியாவிலேயே ஆண்டிராய்ட் 10ல் இயங்கும் முதல் டிவி” – மோட்டோரோலா அறிமுகம்

இந்த ஸ்மார்ட் டிவிக்கள் ஆண்டிராய்ட் 10 இயங்குதளத்தில் இயங்குகிறது. இந்தியாவில் ஆண்டிராய்ட் 10 உடன் இயங்கும் முதல் டிவி இது தான் என கூறப்படுகிறது. இந்த டிவியில், 1.5 ஜிகா ஹெர்ட்ஸ் சிஏ 53 குவாட் கோர் பிராசசர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி ( இசட் எக்ஸ் 2 மாடல்களில்) மற்றும் 32 ஜிபி மெமரி ( ரொவோ மாடல்களில்) கிடைக்கும் என தெரிகிறது. மேலும் டால்பி அட்மாஸ், டால்பி ஆடியோ, டால்பி ஸ்டூடியோ சவுண்ட், டால்பி விஷன், எச்டிஆர் 10 சப்போர்ட் ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

  • எஸ். முத்துக்குமார்