மோட்டோரோலா ஆம்பிசவுண்ட்எக்ஸ் ஹோம் தியேட்டர் சிஸ்டம்ஸ் இந்தியாவில் அறிமுகம்

 

மோட்டோரோலா ஆம்பிசவுண்ட்எக்ஸ் ஹோம் தியேட்டர் சிஸ்டம்ஸ் இந்தியாவில் அறிமுகம்

டெல்லி: மோட்டோரோலா ஆம்பிசவுண்ட்எக்ஸ் ஹோம் தியேட்டர் சிஸ்டம்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஆம்பிசவுண்ட்எக்ஸ் ஹோம் தியேட்டர் சிஸ்டம்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 80W, 150W மற்றும் 160W ஆகிய மாடல்களில் இந்த புதிய ஹோம் தியேட்டர் சிஸ்டம்ஸ் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. பல ஸ்பீக்கர்கள் மற்றும் ப்ளூடூத் சப்போர்ட்டை இந்த ஹோம் தியேட்டர் சிஸ்டம் பெற்றுள்ளது. அத்துடன் எச்.டி.எம்.ஐ ஏ.ஆர்.சி, ஆப்டிகல் ஆடியோ, யூ.எஸ்.பி, 8 இன்ச் பேஸ் டிரைவருடன் இந்த ஹோம் தியேட்டர் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஆம்பிசவுண்ட்எக்ஸ் ஹோம் தியேட்டர் சிஸ்டம்ஸ் இந்தியாவில் அறிமுகம்

இதன் 80W மாடல் விலை ரூ.7,999 எனவும், 150W மற்றும் 160W ஆகிய மாடல்களின் விலை ரூ.10,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எச்.டி.எப்.சி வங்கி கார்டு மூலம் இந்த சாதனங்களை வாங்குவோருக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். மோட்டோரோலா ஆம்பிசவுண்ட்எக்ஸ் ஹோம் தியேட்டர் சிஸ்டம்களை பொறுத்தவரை அனைத்து வாட்ஸ் மாடல்களும் ஒரு சவுண்ட்பார் ஸ்பீக்கர் மற்றும் பேஸ் ஸ்பீக்கர் உட்பட 5.1 ஸ்பீக்கர்களாக கிடைக்கிறது.