இன்ஸ்யூரன்ஸ் துறையையும் விட்டு வைக்காத லாக்டவுன்… குறிப்பாக வாகன இன்ஸ்யூரன்ஸ் விற்பனை 50 சதவீதம் அவுட்…

இன்ஸ்யூரன்ஸ் துறையையும் விட்டு வைக்காத லாக்டவுன்… குறிப்பாக வாகன இன்ஸ்யூரன்ஸ் விற்பனை 50 சதவீதம் அவுட்…

லாக்டவுனால் இன்ஸ்யூரன்ஸ் (காப்பீடு) துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வாகன இன்ஸ்யூரன்ஸ் விற்பனை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் இம்மாதம் 31ம் தேதி வரை நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் போக்குவரத்து, தொழில்துறை என அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இன்ஸ்யூரன்ஸ் துறையும் லாக்டவுனால் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

இன்ஸ்யூரன்ஸ் துறையையும் விட்டு வைக்காத லாக்டவுன்… குறிப்பாக வாகன இன்ஸ்யூரன்ஸ் விற்பனை 50 சதவீதம் அவுட்…

இன்ஸ்யூரன்ஸ் துறையில் வாகன இன்ஸ்யூரன்ஸ் பிரிவு கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வாகன இன்ஸ்யூரன்ஸ் விற்பனை சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 49 சதவீதம் குறைந்து ரூ.2,621 கோடியாக குறைந்தது. மரைன், என்ஜினீயரிங், விமானம், பயிர் மற்றும் தனிநபர் விபத்து உள்ளிட்ட இதர இன்ஸ்யூரன்ஸ் பிரிவு வர்த்தகங்களிலும் விற்பனை 5 முதல் 40 சதவீதம் சரிவு கண்டுள்ளது.

இன்ஸ்யூரன்ஸ் துறையையும் விட்டு வைக்காத லாக்டவுன்… குறிப்பாக வாகன இன்ஸ்யூரன்ஸ் விற்பனை 50 சதவீதம் அவுட்…

அதேசமயம் மருத்துவ இன்ஸ்யூரன்ஸ் விற்பனை மட்டும் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மருத்துவ காப்பீடு விற்பனை 5.4 சதவீதம் அதிகரித்து ரூ.4,509 கோடியாக உயர்ந்துள்ளது. மருத்து காப்பீடு விற்பனை அதிகரித்து இருப்பது குறித்து ஸ்டார் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ. பிரகாஷ் கூறுகையில், தனியார் சுகாதாரத்துக்கான அதிக செலவுகளை கருத்தில் கொண்டு மருத்துவ காப்பீட்டின் அவசியத்தை பற்றி அதிகமான நபர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள். அதேசமயம் பல சில பெருநிறுவனங்கள் சில செலவினங்களை குறைக்க விரும்புகின்றனர் மற்றும் தொழிலாளர்களுக்கான காப்பீடு செய்யப்பட்ட சார்புடையவர்களின் எண்ணிக்கை குறைக்க முடியுமா என கேட்டுள்ளனர் என தெரிவித்தார்.