3 மாத சிசுவை அண்டா நீரில் மூழ்கடித்து கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்: ஈரோட்டில் பரபரப்பு!

மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. இதனால் சங்கீதா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த மூங்கில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதையடுத்து சங்கீதா இரண்டாவது முறையாக மீண்டும் கருத்தரித்துள்ளார்.

அதனால் இரண்டாவதாக பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என சங்கீதா எண்ணியதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. இதனால் சங்கீதா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிறந்து 3 மாதங்களே ஆன தனது குழந்தையை அண்டா தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பெருந்துறை போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Most Popular

அமிதாப் பச்சனைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி ! சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்த நிலையில் தற்போது அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி...

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி !

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நடிகர் அமிதாப் பச்சன் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர்...

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது திமுக எம்.எல்.ஏ-வின் தந்தை துப்பாக்கிச்சூடு!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இல்லலூர் செங்காடு பகுதியில் தாண்டவ மூர்த்தி மற்றும் குமார் என்பவருக்கு சொந்தமாக 100 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு போக்குவரத்துக்கு வழி இல்லாத காரணத்தினால் அரசு...

தங்கக் கடத்தல் வழக்கு- ஸ்வப்னா கைது

கேரளாவில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த ஸ்வப்னா பெங்களூரிவில் கைது செய்யபட்டுள்ளார். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக...
Open

ttn

Close