Home இந்தியா 'ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்' தாயை இரும்புக் கம்பியால் அடித்து மகன்களே கொலை செய்த கொடூரம்!

‘ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்’ தாயை இரும்புக் கம்பியால் அடித்து மகன்களே கொலை செய்த கொடூரம்!

புவனேஸ்வர் பகுதியில் இரும்புக் கம்பியால் தாயை மகன்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க தாயுடன், 2 மகன்கள் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் 3 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த தாய் சிறுவர்கள் இரண்டு பேரையும் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்து, தலையிலேயே அடித்துள்ளனர். அதில், படுகாயம் அடைந்த தாய் ரத்த வெள்ளத்தில் துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புவனேஸ்வர் காவல்நிலைய டிசிபி உமாஷங்கர் தாஸ் தலைமையிலான போலீசார், சிறுவர்கள் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். பின்னர், உயிரிழந்த தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பேசிய உமாஷங்கர் தாஸ், குற்றவாளிகளான சிறுவர்களை கைது செய்திருப்பதாகவும் இந்த கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியிருக்கிறார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

”எனது உளம் கனிந்த…” முதல்வரின் வாழ்த்து!

நாளை ஆயுதபூஜை கொண்டாட மக்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி...

திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, திருப்பத்தூரில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர்...

சூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தேதி அறிவிப்பு!

இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை அபர்ணா பாலமுரளி, ஜாக்கி...

ஐபிஎல்: 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்டின் 42வது ஆட்டத்தில் , மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி...
Do NOT follow this link or you will be banned from the site!