டிக்டாக் காதலர்களுடன் தாய், மகள் எஸ்கேப்… வேதனையில் உயிரைவிட்ட தந்தை… அநாதையான 15 வயது மகன்

 

டிக்டாக் காதலர்களுடன் தாய், மகள் எஸ்கேப்… வேதனையில் உயிரைவிட்ட தந்தை… அநாதையான 15 வயது மகன்

டிக்டாக் காதலர்களுடன் தாயும், மகளும் எஸ்கேப் ஆனதால் வேதனையில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய 15 வயது மகன் அநாதையாக தவிர்த்து வருகிறார்.

தமிழகத்தில் டிக்டாக் மோகத்தால் பல பெண்கள் தங்கள் வாழ்க்கை இழந்து வருகின்றனர். குறிப்பாக இளம்பெண்கள், இளைஞர்கள் டிக்டாக்குக்கு அடிமையாகி விட்டனர். அண்மையில் சீனாவின் டிக்டாக் அப் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் பல டிக்டாக் அப்கள் பெருகியது. கள்ளக்காதல், தவறான பழக்கத்தால் இளம்பெண்கள், பெண்கள், இளைஞர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டனர். திருமணமான பெண்கள் பலர் டிக்டாக்கில் விதவிதமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் பல குடும்பங்களில் பிரச்னை நிலவி வருகிறது. இந்த நிலையில், டிக்டாக் மோகத்துக்கு அடிமையான தாயும், மகளும் காதலர்களுடன் ஓட்டம் பிடித்துள்ளனர். வேதனையில் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

திருப்பூரை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ஷர்மிளா, மகள் வைஷ்ணவி (பெயர்கள் மாற்றம்). ஒரு மகன் இருக்கிறான். தாய், மகள் இருவரும் பியூட்டி பார்லரில் பணியாற்றி வருகின்றனர் . டிக்டாக் மோகத்துக்கு அடிமையான இவரும், இதன் மூலம் வேறு நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தாயின் கள்ளக்காதல் தெரிந்தும் தனது தந்தையிடம் சொல்லாமல் இருந்துள்ளார் வைஷ்ணவி. இந்த நிலையில், நீ காதலிப்பை அப்பாவிடம் சொல்லிவிடுவேன் என்று தாய் மிரட்டியுள்ளார். இதனால், இவரும் ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்காமல் டிக்டாக் மூலம் தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் டிக்டாக் காதலர்களுடன் இரண்டு பேரும் ஊர் சுற்ற ஆரம்பித்தனர். இந்த தகவல் ரவிக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, கள்ளக்காதலனுடன் தாயும், காதலனுடன் ஓட்டம் பிடித்தனர். இதனால் அவமானம் அடைந்த ரவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கள்ளக்காதலன் மற்றும் காதலனுடன் எஸ்கேப்பான தாயும், மகளையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், அம்மாவும், அக்காவும் வீட்டை விட்டு ஓடிய நிலையில் 15 வயதான மகன் ஆதரவற்ற நிலையில் உள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.