Home தமிழகம் பைக் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில், தாய் - மகன் பலி!

பைக் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில், தாய் – மகன் பலி!

நாமக்கல்

நாமக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது, பின்னால் வந்த அரசுப்பேருந்து மோதிய விபத்தில் தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த பெரிய கோட்டப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (50). இவரது தாய் பெருமாயி. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாதேஸ்வரன், தனது தாயாரை அழைத்துகொண்டு இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மல்லசமுத்திரம் அருகே சென்றபோது, மாதேஸ்வரன் வாகனம் மீது பின்னால் வந்த அரசுப்பேருந்து அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மாதேஸ்வரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பெருமாயி படுகாயம் அடைந்தார்

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews