“நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது” – ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன்

 

“நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது” – ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன்

நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது என்று ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

“நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது” – ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன்

தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்ற கருத்தை பலரும் கூறி வருகின்றனர் . திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்து அவர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனிடையே நீட் தேர்வின் தாக்கம் குறித்து உரிய முறையில் விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு நீட் தேர்வு வேண்டுமா ?அல்லது வேண்டாமா என்பது குறித்து பொதுமக்களும், மாணவர்களும் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தது.

“நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது” – ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன்

இந்நிலையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்த இரண்டாம் கட்ட ஆலோசனைக்கு பின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த பேட்டியில், “இதுவரை வந்த கருத்துக்களின் அடிப்படையில் பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என கூறியுள்ளனர் .சிலர் மட்டுமே நீட்தேர்வு வேண்டுமென கருத்து கூறியுள்ளனர். இன்னும் சில முக்கியமான சில தரவுகள் வர வேண்டியுள்ளன. அதன் அடிப்படையில் இறுதி அறிக்கை தயார் செய்யப்படும். அனைத்து தரப்பினரின் கருத்துகளை ஆராய்ந்த பிறகு இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் , எதிராகவும் இதுவரை 25 ஆயிரம் கடிதங்கள் வந்துள்ளன. அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் கேட்கும் சூழல் தற்போது இல்லை .சிலர் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் நீட் தேர்வு வேண்டாம் என கூறியுள்ளனர்” என்றார்.முன்னதாக 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையில், நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான சட்டங்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.