பெரும்பாலான கொரோனா தொடர்பான மொபைல் ஆப்கள் தனியுரிமை பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை

 

டெல்லி: பெரும்பாலான கொரோனா தொடர்பான மொபைல் ஆப்கள் தனியுரிமை பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

பெரும்பாலான கொரோனா தொடர்பான மொபைல் ஆப்கள் தனியுரிமை பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை

கொரோனா பரவலைக் கண்காணிக்கும் பெரும்பாலான மொபைல் ஆப்கள் பயனர்களின் தனிப்பட்ட தரவை அணுக வேண்டும். ஆனால் பெரும்பாலான கொரோனா தொடர்பான மொபைல் ஆப்கள் தனியுரிமை பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை என்று அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்பானா-சாம்பேனில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மசூதா பஷீர் மற்றும் முனைவர் மாணவர் தனுஸ்ரீ சர்மா ஆகியோர் கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் 50 கொரோனா தொடர்பான ஆப்களை பயனர்களின் தனிப்பட்ட தரவு மற்றும் அவர்களின் தனியுரிமை பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்தனர்.

உடல்நலம், இருப்பிடம், பெயர், வயது, மின்னஞ்சல் முகவரி மற்றும் வாக்காளர் தேசிய அடையாளம் போன்ற நேரடி பயனர் தகவல்களை பற்றி, இந்த ஆப்கள் தொடர்ந்து சேகரித்து அவற்றை கண்காணிக்கின்றன என்பதை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.