வெளியான வீடியோக்கள் -பலியான மாணவர்கள் -ஆன்லைன் வகுப்பில் நடந்த விபரீதம்

 

வெளியான வீடியோக்கள் -பலியான மாணவர்கள் -ஆன்லைன் வகுப்பில் நடந்த விபரீதம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆன் லைனில் வகுப்புகள் நடந்து வந்தது .இந்நிலையில் அதில் கலந்து கொண்ட பல மாணவ மாணவிகளின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வந்ததால் அங்கு அந்த ஆன் லைன் வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன .

வெளியான வீடியோக்கள் -பலியான மாணவர்கள் -ஆன்லைன் வகுப்பில் நடந்த விபரீதம்


இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :அந்த பன்னிரெண்டாம் வகுப்பின் ஆன் லைன் வகுப்பில் ஜூம் ஆப்பில் 10 மாணவ மாணவிகள் தினமும் கலந்து கொள்வார்கள் .அப்போது திடீரென கடந்த வாரம் அந்த ஆன் லைன் வகுப்புக்குள் இணையத்தில் வந்த மாணவர்களின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியானது .இதை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்து அந்த ஆசிரயரிடம் புகார் கூறினர் .பின்னர் வகுப்பு தொடங்கியதும் யாரோ ஒருவர் ஜூம் ஆப்பை ஆன் செய்யாமல் அந்த அந்த வீடியோ காட்சிகளை எடுத்து வேறு யாருக்கோ அனுப்புவதை கண்டனர் .அவரை யாரென்று கண்டுபிடுப்பதற்குள் அவர் ஆன்லைனிலிருந்து போய் விட்டார் .இதனால் அந்த ஆசிரியர் , மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனைவிரும் அந்த மோசடி பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கூறினர் .உடனே பள்ளி நிர்வாகம் இந்த ஆன் லைன் வகுப்பை கான்செல் செய்தது .பின்னர் சைபர் க்ரைம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீஸ் விசாரணையில் சிலர் அந்த மாணவர்களின் வீடியோவை டார்க் வெப் சைட்டுக்கு விற்றுள்ளனர் .இதே போல ஏழு மாதங்களுக்கு முன்பு கூட அந்த பள்ளியில் நடந்தது .அப்போதும் அந்த ஆன் லைன் வகுப்புகள் கான்செல் செய்யப்பட்டது .பின்னர் அந்த குற்றவாளிகளை கண்டறிய மாநில முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது .

வெளியான வீடியோக்கள் -பலியான மாணவர்கள் -ஆன்லைன் வகுப்பில் நடந்த விபரீதம்