கொரோனா நோயாளிகளுக்கு நலம் தரும் முருங்கைக் கீரை!

 

கொரோனா நோயாளிகளுக்கு நலம் தரும் முருங்கைக் கீரை!

கொரோனா நோய்த் தொற்று நுரையீரலைத் தாக்கி நுண் சுவாச அறை அளவில் வீக்கம் உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்பு வருகிறது. நோயில் இருந்து மீண்டாலும் ஒரு சில வாரங்கள் தொடங்கி மாதம் வரை அந்த பாதிப்பு இருக்கும். இந்த நேரத்தில் கொரோனா வந்த நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவு மிகவும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. புரதச்சத்து நிறைந்த உணவு, சூப் உள்ளிட்டவற்றை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கொரோனா நோயாளிகளுக்கு நலம் தரும் முருங்கைக் கீரை!

கொரோனா நோயாளிகளுக்கு முருங்கைக் கீரை சூப், கீரை பொரியல் போன்றவற்றை வழங்கப் பரிந்துரைக்கின்றனர். முருங்கைக் கீரையில் வைட்டமின் சி, ஏ, பி1, பி2, பி6, ஃபோலேட், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் (ஜிங்க்) உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.

ஒரு கப் முருக்கையில் ஒரு நாள் தேவையில் 8 சதவிகித மக்னீஷியம், 11 சதவிகித இரும்புச் சத்து, 11 சதவிகித ரிபோஃபிளேவின், 9 சதவிகித வைட்டமின் ஏ, 2 கிராம் அளவுக்கு புரதச்சத்தும் உள்ளது. மேலும் 18 வகையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை புரதச்சத்தைக் கட்டமைக்கும் பணியை செய்கின்றன. இதுவும் முருங்கைக் கீரையை பரிந்துரைக்க முக்கிய காரணமாக உள்ளது.

முருங்கைக் கீரை செல்களில் ஏற்படும் வீக்கத்தை

(anti-inflammatory) போக்கும் தன்மை கொண்டது. புற்றுநோய், வீக்கம் – அழற்சி காரணமாக ஏற்படும் முடக்கு வாதம், கீல்வாதம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளைத் தடுக்கிறது.

கொரோனா நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்துவிடுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் முருங்கைக் கீரைக்கு உள்ளது. தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைகிறது.

உடலில் கொலஸ்டிரால் அளவைக் குறைக்கவும் முருங்கைக் கீரை உதவுகிறது. இதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

முருங்கைக் கீரை ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உதவுகிறது.

முருங்கை கீரை உடலில் உள்ள கொழுப்புக்களை எரிக்கும் செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது. இதன் காரணமாக உடல் எடை குறைய உதவுகிறது.