பொதுமுடக்க விதிமீறல்: ரூ.20 கோடியை எட்டியது வசூலிக்கப்பட்ட அபராதத்தொகை!

 

பொதுமுடக்க விதிமீறல்: ரூ.20 கோடியை  எட்டியது வசூலிக்கப்பட்ட அபராதத்தொகை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெருமளவு பரவியதன் காரணமாக வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. வழக்கம் போலவே மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன புழக்கங்கள் இருந்தாலும், ஒரு மாவட்டம் விட்டு பிற மாவட்டம் செல்லவோ அல்லது ஒரு மாநிலம் விட்டு பிற மாநிலம் செல்லவோ அனுமதி கிடையாது. அவசர காரணங்களுக்காக செல்ல வேண்டும் என்றாலும் இபாஸ் பெற்றுத் தான் செல்ல வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருக்கிறது. குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த பொதுமுடக்க நாட்களில் விதிகளை மீறி சுற்றித்திரிபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொதுமுடக்க விதிமீறல்: ரூ.20 கோடியை  எட்டியது வசூலிக்கப்பட்ட அபராதத்தொகை!

இந்த நிலையில் பொதுமுடக்க விதிகளை மீறிய நபர்களிடம் இருந்து இதுவரை ரூ.20.43 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கை மீறிய 6.79 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 9.64 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் 8.73 லட்சம் வழக்குகள் பதிவ்ய் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.