அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 705 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 705 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

நியூயார்க்: அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 705 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 4 லட்சத்து 62 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 87 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 46 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும், கொரோனா பலி எண்ணிக்கை பட்டியலில் அந்நாடு தற்போது 18-வது இடத்திற்கு சென்று விட்டது.

covid 19

ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 705 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 9-வது நாளாக 1000-க்கு கீழ் பதிவாகியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 22 லட்சத்து 19 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Most Popular

ராமர் கோயில் பூமி பூஜை… காங்கிரஸ் தலைவர் கபில் சிபலின் வித்தியாசமான டிவிட்

ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று சிறப்பாக நடைபெற்றது. நேற்று பல்வேறு தரப்பு தலைவர்களும் பூமி பூஜைக்கு வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் பொது...

சட்டப்பிரிவு 370 ரத்து.. காஷ்மீர் வளர்ச்சிக்காக பல தசாப்தங்களாக இருந்த இருளை மோடி நீக்கினார்.. பியூஸ் கோயல்

ஜம்மு அண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்யப்பட்டு நேற்றோடு ஒராண்டு முடிவடைந்து விட்டது. அதனை முன்னிட்டு நேற்று, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் டிவிட்டரில், சமானிய மக்களுக்கு...

பாபர் மசூதி இடிப்பு, பால் தாக்கரே படத்துடன் சாமனா பத்திரிகையில் விளம்பரம்.. சர்ச்சையை கிளப்பிய சிவ சேனா..

பல இந்துக்களின் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, நேற்று நிஜமானது. ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைகளோடு நேற்று தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்காததால் சிவ...

பாபர் மசூதி இருந்தது, உள்ளது மற்றும் இருக்கும்…. பரபரப்பை ஏற்படுத்திய அசாதுதீன் ஓவைசியின் டிவிட்

அயோத்தியில் நேற்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று சிறப்பாக நடந்தது. அதேசமயம் அந்த விழா நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி டிவிட்டரில்...