முழு ஊரடங்கு- கடலூர் கோவில் வாசலில் நடந்த 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள்!

 

முழு ஊரடங்கு- கடலூர் கோவில் வாசலில் நடந்த 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள்!

கடலூர்

கடலூரில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் வாசலில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்கும் விதமாக, இன்று ஞாயிற்றுக் கிழமை முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கு- கடலூர் கோவில் வாசலில் நடந்த 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள்!

இந்த நிலையில், கடலூரில் பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள், பொதுமுடக்கம் காரணமாக அங்குள்ள புகழ்பெற்ற திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் வாசலில் எளிமையான முறையில் இன்று நடைபெற்றது.

இதனையொட்டி, அதிகாலை 4.30 மணி முதல் 50-க்கும் மேற்பட்ட ஜோடிகள் கோயில் வாயில் முன்பாக அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் பஙகேற் ஏராளமானோர் வந்திருந்ததால் திருவந்திபுரம் கோயில் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.