4 மணி நேரத்தில் 4000 க்கும் மேற்பட்டோர் இலங்கையில் கைது

 

4 மணி நேரத்தில் 4000 க்கும் மேற்பட்டோர் இலங்கையில் கைது

இலங்கையில் குறிப்பிட்ட நேரத்தில் ஆயிரக் கணக்கில் நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார் எனும் தகவல் வியப்பை அளிக்கிறது.

இலங்கையில் நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) நாடு முழுக்க காவல் துறையால் நடத்தப்பட்ட சோதனையால் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 மணி நேரத்தில் 4000 க்கும் மேற்பட்டோர் இலங்கையில் கைது

16,000 க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் நேற்று இரவு மணி சுமார் 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் 45 மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டனவாம்.

போதை மருந்துகளான கஞ்சா, இலங்கை சட்டத்திற்கு விரோதமான வகையிலான மதுபானம்  உள்ளிட்டவற்றை வைத்திந்த 1205 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

ஹெராயின் வைத்திருந்த 347 பேர், கஞ்சா வைத்திருந்த 326 பேரும் என பல்வேறு இடங்களில் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையில் மொத்தம் 4183 பேர் நான்கு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

4 மணி நேரத்தில் 4000 க்கும் மேற்பட்டோர் இலங்கையில் கைது

18ஆயிரத்துக்கும் மேற்பட்ட லிட்டர் மதுபானம், 100 கிராம்க்கு அதிகமான அளவில் ஹெராயின் பொருளும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதே கைத்துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வைத்திருந்தவர்களும் இந்தக் கைதில் அடக்கம்.

கைது செய்யப்பட்டிருக்கும் 4183 பேரில் 1143 பேர் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்கள். 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டோர். மீதமுள்ளவர்கள் சந்தேக வழக்கு, சட்ட மீறல் உள்ளிட்டவற்றால் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.