வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது

திருச்சி

திருச்சியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த இரு நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது

இதன் காரணமாக, கோட்டை ரயில் நிலையம் முழுவதுமாக போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் 100-க்கும் மேற்பட்டோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே போலீசாரின் தடுப்புகளையும் மீறி அந்த கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மாற்றுப்பாதை வழியாக ரயில் நிலையத்தில் புகுந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து சென்று அவர்களை கைதுசெய்த நிலையில், திடீரென அந்த வழியாக வந்த மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி சென்ற ஜனசதாப்தி விரைவு ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது

இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனை அடுத்து, மறியலில் ஈடுபட்ட சுமார் 200 பேரை போலீசார் கைதுசெய்து அழைத்துச சென்றனர். மறியல் காரணமாக சுமார் 10 நிமிடங்கள் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.