100 ஆண்டுகள் இல்லாத தீவிர புயலாக மாறியுள்ள நிசர்கா.. 15,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

 

100 ஆண்டுகள் இல்லாத தீவிர புயலாக மாறியுள்ள நிசர்கா.. 15,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வனிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன் படி நிசர்கா என்று பெயரிடப்பட்ட இந்த புயலானது, தீவிர புயலாக மாறி மும்பையில் இருந்து தெற்கு தென்மேற்கு திசையில் 215 கிலோ மீட்டர் தொலைவிலும் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 440 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. வடகிழக்கு திசையில் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த புயல், மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே இன்று பிற்பகலில் கரையை கடக்கிறது.

100 ஆண்டுகள் இல்லாத தீவிர புயலாக மாறியுள்ள நிசர்கா.. 15,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

சுமார் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலுவாக உருவாகியிருக்கும் இந்த புயல் கரையை கடக்கும் போது, 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிகை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் புயலில் இருந்து மக்களை காக்க நிசார்கா புயல்தேசிய பேரிடர் மீட்புப் படைகளின் 30 குழுக்கள் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த மீட்புக் குழுக்களின் மூலம் கடலோர மாவட்டங்களான ராய்காட், ரத்தினகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 15,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். வலுவாக உருவெடுத்துள்ள இந்த புயலில் இருந்து தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை காக்க அவர்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் பணி நடைபெறுவதாக அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.