17 மாவட்டங்களில் 100-க்கும் அதிகமான புதிய நோயாளிகள்! #CoronaUpdates

 

17 மாவட்டங்களில் 100-க்கும் அதிகமான புதிய நோயாளிகள்! #CoronaUpdates

கொரோனா பாதிப்பு என்பது இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் தொடங்கியது. உடனே லாக்டெளன் அறிவிக்கப்பட்டாலும் கொரோனா நோய் தொற்றுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மாறாக அதிவேகமாக எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

17 மாவட்டங்களில் 100-க்கும் அதிகமான புதிய நோயாளிகள்! #CoronaUpdates

தமிழகத்தைப் பொறுத்தவரை லாக்டெளன் தொடங்கிய மார்ச் – ஏப்ரல், மே மாதங்களில் விமான நிலையம் உள்ள மாநகரங்களில்தான் நோய்த் தொற்று அதிகம் இருந்தது. குறிப்பாக சென்னையில் பாதிப்பின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. இப்போது, நோய்த் தொற்று தமிழகத்தின் சிறு கிராமங்களில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பலரும் அச்சத்தில் உள்ளனனர்.

சென்னையைப் பொறுத்தவரை முந்தைய வாரத்தோடு ஒப்பிட்டால் கடந்த சில நாள்களாக் நோய்த் தொற்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தக்கப்படுகிறது. நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது ஆறுதலான செய்தி. இன்றைய நிலையில் (ஜூலை 17) தமிழகத்தில் 4,979 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 1,254 பேர் புதிய நோயாளிகள். இதன் மூலம் தமிழகத்தின் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக உள்ளது. இவர்களின் 1 லட்சத்து 17 ஆயிரத்து 915 பேர் குணம் அடைந்துள்ளனர். 50ஆயிரத்து 294 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,481 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

17 மாவட்டங்களில் 100-க்கும் அதிகமான புதிய நோயாளிகள்! #CoronaUpdates

தமிழகத்து மாவட்டங்கள் எனும் அளவில் பார்க்கும்போது இன்று மட்டும் 17 மாவட்டங்களில் 100 பேருக்கும் அதிகமான புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

1 சென்னை – 1,254 
2. திருவள்ளூர் – 405 
3. செங்கல்பட்டு – 306 
4. விருதுநகர் – 265 
5 காஞ்சிபுரம் – 220 
6. மதுரை – 206 
7. தூத்துக்குடி – 151 
8. திண்டுக்கல் – 139 
9. திருச்சி – 138 
10. கோயம்புத்தூர் – 135 
11 திருவண்ணாமலை – 134 
12 வேலூர் – 133
13 கன்னியாகுமரி – 131 
14 ராமநாதபுரம் – 126 
15 தேனி – 120 
16 கள்ளக்குறிச்சி – 112
17 திருநெல்வேலி – 103

சிவகங்கையில் 93, விழுப்புரம் 86 என்ற அளவில் உள்ளன.