ராஜஸ்தானில் கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 10 லட்சம் பேரிடம் அபராதம் வசூலித்த போலீசார்

 

ராஜஸ்தானில் கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 10 லட்சம் பேரிடம் அபராதம் வசூலித்த போலீசார்

ராஜஸ்தானில் கடந்த 8 மாதங்களில், மாஸ்க் அணிவது உள்ளிட்ட கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களிடம் அபராதமாக மொத்தம் ரூ.14 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் லாக்டவுனை மத்திய அரசு அமல்படுத்தியது. லாக்டவுன் காலத்தில் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது, வீட்டை விட்டு வெளியே வருவதாக இருந்தால் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும், பொது இடங்களில் கூட்டம் போடக்கூடாது மற்றும் எச்சில் துப்பக்கூடாது போன்ற கோவிட்-19 நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டன.

ராஜஸ்தானில் கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 10 லட்சம் பேரிடம் அபராதம் வசூலித்த போலீசார்
லாக்டவுன் காலத்தில் வெளியே வந்த மக்கள் (கோப்புபடம்)

கோவிட்-19 நெறிமுறைகளை கடைப்பிடிக்காத மற்றும் பின்பற்றாத மக்களுக்கு மாநில அரசுகள் அபராதம் விதித்தன. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரையிலான காலத்தில் கோவிட்-19 நெறிமுறைகளை பின்பற்றாத 10.05 லட்சம் மக்களுக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இந்த வகையில் போலீசார் மொத்தம் ரூ.14 கோடி வசூல் செய்துள்ளனர். குறிப்பாக உதய்பூர், ஜெய்ப்பூர் நகரம், பிஹில்வாரா, ஜலவார் மற்றும் பிஹிவாடி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த மக்கள்தான் அதிகமாக கோவிட்-19 விதிமுறைகளை மீறி போலீசாரிடம் சிக்கி அபராதம் செலுத்தியுள்ளனர்.

ராஜஸ்தானில் கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 10 லட்சம் பேரிடம் அபராதம் வசூலித்த போலீசார்
சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மக்கள் (கோப்பு படம்)

ராஜஸ்தான் போலீசாரின் அறிக்கையின்படி, பொது இடங்களில் மாஸ்க் அணியாததால் 3.53 லட்சம் பேர் அபராதம் செலுத்தியுள்ளனர். கடைகளில் பொருட்களை விற்பனை செய்யும் போது மாஸ்க் அணியாத 14,135 கடைக்காரர்கள் பைன் செலுத்தியுள்ளனர். பொது இடங்களில் மது அருந்தியதற்கு 600 பேரும், பொது இடங்களில் எச்சில் துப்பியதற்கு 2,831 பேரும் அபராதம் கட்டியுள்ளனர். சமூக இடைவெளி கடைப்பிடிக்காத குற்றத்துக்காக 6.37 லட்சம் பேர் அபராதம் செலுத்தியுள்ளனர்.