கோவை அரசு மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் நோயாளிகள்!

 

கோவை அரசு மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் நோயாளிகள்!

கோவை

கோவை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பிவிட்டதால் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் கொரோனா நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், தற்போது மாவட்டம் முழுவதும் 13 ஆயித்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் முழுமையாக நிரம்பியதால், புதிதாக சிகிச்சைக்கு வருவோர் முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் நோயாளிகள்!

இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் அங்கு சிகிச்சை பெறுவோர் உயிருக்கு ஆபத்தான சூழலில், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், இன்று கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைகாக, 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் அழைத்து வரப்பட்டனர்.

எனினும் படுக்கைகள் தட்டுப்பாடு காரணமாக, நோயாளிகள் தாங்கள் வந்த ஆம்புலன்ஸ்களிலேயே சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து வருகின்றனர். சிகிச்சை அளிக்காமல் வாகனத்திலேயே காத்திருக்க வைப்பதால் நோயாளிகளின் உறவினர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.