“அமித்ஷாவின் மிரட்டலால் பாஜகவுக்கு அதிக தொகுதிகள்”

 

“அமித்ஷாவின் மிரட்டலால் பாஜகவுக்கு அதிக தொகுதிகள்”

அமித்ஷாவின் மிரட்டலால் பாஜகவுக்கு அதிமுக அதிக தொகுதிகளை ஒதுக்கியுள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“அமித்ஷாவின் மிரட்டலால் பாஜகவுக்கு அதிக தொகுதிகள்”

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில் உடன்பாட்டில் முடிவு எட்டப்பட்டுள்ளது. மயிலாப்பூர், காரைக்குடி ,சேப்பாக்கம் ,வேளச்சேரி ,காஞ்சிபுரம் ,திருத்தணி, பழனி, சிதம்பரம் ,கிணத்துக்கடவு, கோவை தெற்கு, ராசிபுரம் ,ஆத்தூர், திருவாரூர், திருவண்ணாமலை, வேலூர் ,ஓசூர், தூத்துக்குடி ,நெல்லை ,ராஜபாளையம் ,சென்னை துறைமுகம் உள்ளிட்ட தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“அமித்ஷாவின் மிரட்டலால் பாஜகவுக்கு அதிக தொகுதிகள்”

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிமுக அதிக சீட்டுகளை ஒதுக்க முன்வரவில்லை.ஆனால் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது கூட்டணி கட்சிகளில் இருந்த பிற கட்சிகள் மத்தியில் அதிருப்தி உண்டாக்கியது. அத்துடன் பாஜக உடன் இருக்கும் பலத்தால் பல கட்சிகளை அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால் சமத்துவ மக்கள் கட்சி, கருணாஸ் உள்ளிட்டோர் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறினர்.

“அமித்ஷாவின் மிரட்டலால் பாஜகவுக்கு அதிக தொகுதிகள்”

இந்நிலையில் திமுக – மார்க்சிஸ்ட் தொகுதி பங்கீடு குறித்து பேசியுள்ள கே.பாலகிருஷ்ணன், “அமித்ஷாவின் மிரட்டலால் பாஜகவுக்கு அதிக தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது . அதிமுக கூட்டணி எதற்கும் பயன் தராது. எப்போது யார் பிரிந்து செல்வார்கள் என்று தெரியாது. அதிக தொகுதிகளில் போட்டியிட கட்சிகள் விரும்புகின்றன; நாங்களும் விரும்புகிறோம்; மற்ற கட்சிகளை ஒப்பிட்டு நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை கேட்கவில்லை; திமுகவுடன் விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்” என்றார்.