ஏசி கோச்சில ஏசி யாவது போடுவீங்களா ?-இனி ரயில்ல போனா எதுவும் கிடையாதாம்

ஏசி கோச்சில ஏசி யாவது போடுவீங்களா ?-இனி ரயில்ல போனா எதுவும் கிடையாதாம்

ஊரடங்கு முடிந்து ரயில்கள் ஓட துவங்கினாலும், அதில் பயணிக்க நிறைய கட்டுப்பாடுகள் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக ஒரு ரயில்வே உயர் அதிகாரி கூறினார் .

ஏசி கோச்சில ஏசி யாவது போடுவீங்களா ?-இனி ரயில்ல போனா எதுவும் கிடையாதாம்

கொரானா பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதால் இந்தியா முழுவதும் ரயில்கள் நிறுத்தப்பட்டன .இந்நிலையில் மத்திய அரசு ஒவ்வொரு துறையாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில் செப்டம்பர் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளது .அதை தொடர்ந்து விரைவில் ரயில் சேவை தொடங்கப்பட்டால் என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கலாமென்று ரயில்வே உயரதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு வீடியோ கான்பெரென்ஸ் நடைப்பெற்றது .
அந்த கான்பெரன்ஸில் இனி ரயிலில் ஏசி கோச்சில் பயணிக்கும் பயணிகளுக்கு முன்பு போல தலையணை ,போர்வைகள் வழங்கப்படாது என்றும் ,பயணிகளே அவற்றை கொண்டு வரவேண்டுமென்றும் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது .மேலும் உணவுகூட வழங்கப்படுவது சந்தேகமே என அந்த உயரதிகாரி கூறினார் .இதனால் இனி ரயில் பயணிகள் டிக்கெட் புக் பண்ணியவுடன் ரயிலில் பயணிக்க தலையணை ,போர்வையாகலையும் கொண்டு செல்ல நேரிடும் .கூடவே உணவையும் சமைத்து புளிசாதம் தயிர்சாதம் கட்டிக்கொண்டு அந்த காலம் போல ரயில் பயணத்திற்கு கிளம்ப வேண்டிய சூழலை கொரானா வைரஸ் உண்டாக்கிவிட்டது

ஏசி கோச்சில ஏசி யாவது போடுவீங்களா ?-இனி ரயில்ல போனா எதுவும் கிடையாதாம்