ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள்? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

 

ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள்? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள்? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கடந்த 1 ஆம் தேதி 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளி ,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் நேற்று ஒரேநாளில் 1,544 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 25 ஆயிரத்து 778ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது.

ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள்? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா ஊரடங்கு செப்டம்பர் 15ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இன்று காலை 11:30 மணிக்கு ஆலோசனை நடக்கிறது. தலைமை செயலாளர் ,மருத்துவத் துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அத்துடன் 1 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.