ஊரடங்கு காலத்தில் ஆட்டோ, டாக்சி இயங்கத் தடை… வங்கிகள் 2 நாள் மட்டுமே செயல்பட அனுமதி!

 

ஊரடங்கு காலத்தில் ஆட்டோ, டாக்சி இயங்கத் தடை… வங்கிகள் 2 நாள் மட்டுமே செயல்பட அனுமதி!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ள ஊரடங்கு காலத்தில் ஆட்டோ, டாக்சி இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வருகிற 19ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு தளர்வு வழங்கப்படுகிறது.

ஊரடங்கு காலத்தில் ஆட்டோ, டாக்சி இயங்கத் தடை… வங்கிகள் 2 நாள் மட்டுமே செயல்பட அனுமதி!வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகங்கள் அனுமதிக்கப்படாது. எனினும், அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.
மாநில அரசுத் துறைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத் துறை. கருவூலத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல், தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.

ஊரடங்கு காலத்தில் ஆட்டோ, டாக்சி இயங்கத் தடை… வங்கிகள் 2 நாள் மட்டுமே செயல்பட அனுமதி!மத்திய அரசு அலுவலகங்களிலும் 33 சதவிகித பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும்.
வங்கிகள் 29, 30 ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே 33 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுவார்கள். முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர், நோயாளிகளுக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும். அம்மா உணவங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும். பொது மக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் அனுமதியுடன் இயங்கலாம். பத்திரிகைகள், தொலைக்காட்சி, நீதித்துறை, நீதிமன்றம், 12 நாட்களுக்கு பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமானப் பணி அனுமதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.