நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி! முன்பதிவு எப்போது? விவரம் உள்ளே…

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி! முன்பதிவு எப்போது? விவரம் உள்ளே…

தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து பேருந்து சேவை கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. செப்.7 ஆம் தேதி முதல் தனியார் பேருந்துகள், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை மற்றும் பயணிகள் ரயில் சேவைக்கு அனுமதி அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக மொத்தம் 13 ரயில்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி! முன்பதிவு எப்போது? விவரம் உள்ளே…

இந்நிலையில் தற்போது கூடுதலாக 7 சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதில் சென்னையிலிருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, கொல்லம் மற்றும் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்காலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் இந்த ரயில் தமிழகம் வழியாகத்தான் செல்லும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன் பதிவு நாளை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.