Home ஆன்மிகம் முற்பிறவி பாவத்தையும் போக்கும் மூன்றாம் பிறை தரிசனம்!

முற்பிறவி பாவத்தையும் போக்கும் மூன்றாம் பிறை தரிசனம்!

இன்று மூன்றாம் பிறை தரிசனம் நாள்

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தையும் போக்கும் என்பது ஐதீகம். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதே அமாவாசை திதி. ஒவ்வொரு அமாவாசைக்கு பின் 3- ம் நாள் மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலா தெரிவதில்லை. ஆனால், 3 – ம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலா அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு முன் 6.30 மணிக்கே தோன்றும்.

மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத் தான் சிவன் தன் முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும் .

மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும் ஆயுள் கூடும். இன்று மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமானது, உடல், மனம், புத்தி, உள்ளம், அறிவு ஆகிய ஐந்திற்கும் சுத்தி அளிப்பதாகும்.

மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள கல்மிஷங்கள், பாபங்கள், குழப்பங்கள் விலகி மன நிம்மதியும், தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.

ஒருமுறை விநாயகரின் திருவுருவை பார்த்து பரிகசித்தான் சந்திரன் அதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் “அழகன் உன் கர்வம் தொலையட்டும்” என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றிய சந்திரன் பொலிவு இழந்தான். கலை இழந்த சந்திரன், சாபத்தில் இருந்து விடுபட சிவனை நோக்கி கடும் தவம் இருந்து பழையபடி முழுவெண்மதி ஆனான். சிவன் சந்திரனை முடியில் சந்திரசேகரன் ஆனார். சந்திரமொலி, பிறைசூடன் என்று வணங்கப்படுகிறார்.

முன்றாம் பிறை சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க வேண்டும். அப்படி வணங்குவதால் பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படும்.

சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் மூன்றாம் பிறை தரிசனம் கண்பதால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம். தன் வாழ்நாளில் ஆயிரம் மூன்றாம் பிறை, பார்த்தால் முக்தி கிடைக்கும். வளர்பிறையில் எந்த காரியம் தொடங்கினாலும் அந்த காரியம் வளம் பெறும் என்பது ஐதீகம்.

தரிசனத்தின் போது “ஸ்ரீசந்திர மௌலீஸ்வராய நம!” அல்லது “ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா போற்றி” என்ற இடைவிடாமல் ஜெபித்து வந்தால் மனம் அமைதி அடையும். அறிவு ஒளி பெற்றுத் தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எக்காலதிலும் மன வியாதிகளோ, அறிவு மயக்க நிலையோ வராது.

பித்தாபிறை சூடீபெருமானே அருளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே – சுந்தரர் தேவாரம்.

ஜாதகத்தில் சந்திரதோஷம் இருப்பவர்கள் அமாவாசைக்குப் பின்ர வரும் துதியை திதியில் விரதம் இருந்து மாலையில் சந்திர தரிசனம் செய்தால் தோஷம் விலகும்.

சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள‌ அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.

மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியமாகும். மூன்றாம் பிறை தரிசனம் செய்து சிவனருள் பெற்று உயவோம்.

-மு.ரா.சுந்தரமூர்த்தி

மாவட்ட செய்திகள்

Most Popular

சசிகலாவைச் சுற்றி மாஸ்க் அணியாத அத்தனை பேரா? – புது சர்ச்சை!

சசிகலா உடல்நிலை பற்றிய செய்திகளின் அப்டேட்கள் வந்தவண்ணம் உள்ளன. ஜெயலலிதா சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான தீர்ப்பு வெளிவந்த போது ஜெயலலிதா உயிரோடு இல்லை. அதனால் சசிகலா உள்ளிட்ட...

“பயிர் சேதம் குறித்து, ஜன. 29-க்குள் அறிக்கை தர உத்தரவு” – ககன்தீப் சிங் பேடி

தஞ்சாவூர் பயிர் சேதம் குறித்த அறிக்கையை ஜனவரி 29-க்குள் உயர் அதிகாரிகளிடம் வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளதாக, வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்...

உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கடந்த 18ம் தேதி...

கொரோனா தடுப்பூசியில் 1 லட்சத்தைக் கடந்த மாநிலம் இதுதான்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளில் பல நாடுகள் களம் இறங்கி விட்டன. இந்தியாவிலும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
Do NOT follow this link or you will be banned from the site!