வெள்ளை மாளிகையை அலங்கரிக்கும் 3.9 பில்லியன் ஆண்டு பழமையான நிலவின் பாறை!

 

வெள்ளை மாளிகையை அலங்கரிக்கும் 3.9 பில்லியன் ஆண்டு பழமையான நிலவின் பாறை!

ஜோ பைடன் அரசின் கோரிக்கைக்கிணங்க 3.9 பில்லியன் ஆண்டு பழமையான நிலவின் பாறை துண்டை வெள்ளை மாளிகைக்கு நாசா அனுப்பிவைத்தது. முந்தைய தலைமுறையின் லட்சியங்களையும் சாதனைகளையும் போற்றும் வகையில் இது வெள்ளை மாளிகையில் காட்சிப்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் ஜன.20ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றுக்கொண்ட பின் வெள்ள மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்தில் பணிகளைத் தொடர்ந்தார். அந்த அலுவலகத்தில் தான் முதல் நாளிலேயே 15 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

வெள்ளை மாளிகையை அலங்கரிக்கும் 3.9 பில்லியன் ஆண்டு பழமையான நிலவின் பாறை!

ஓவல் அலுவலகத்தில் 1972ஆம் ஆண்டு நிலவிலிருந்து எடுத்துவரப்பட்ட 333 கிராம் பாறையைக் காட்சிக்காக வைக்க அதிபர் தரப்பிடமிருந்து நாசாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

முந்தைய தலைமுறையினரின் லட்சியங்கள் மற்றும் சாதனைகளைகளைப் போற்றும் நோக்கிலும், தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதற்காக பைடன் அரசு நாசாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்தப் பாறை 3.9 பில்லியன் ஆண்டுக்கு முன் உருவாகியது என ஆய்வின் படி தெரியவந்தது. இது நிலவின் டாரஸ்-லிட்ரோ பள்ளத்தாக்கிலுள்ள வடக்கு மாசிஃப் பகுதியில் எடுக்கப்பட்டது. கடைசியாக நிலவில் கால் பதித்த அப்போலோ 17 விண்வெளி வீரர்களால் இந்தப் பாறை மாதிரி சேகரிக்கப்பட்டது.

வெள்ளை மாளிகையை அலங்கரிக்கும் 3.9 பில்லியன் ஆண்டு பழமையான நிலவின் பாறை!

அதிபரின் கோரிக்கையை ஏற்ற நாசா, தற்போது அந்தப் பாறையை வெள்ளை மாளிகைக்கு அனுப்பிவைத்துள்ளது. மெட்டல் மற்றும் கண்ணாடியால் சூழப்பட்ட ஒரு பெட்டிக்குள் அடைக்கப்பட்டுள்ள நிலவின் பாறை மாளிகையில் இருக்கும் புத்தக அலமாரியில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.