மூக்குத்தி அம்மன் பேசுவது ஆன்மிகமா… அரசியலா? #Mookuthiamman

 

மூக்குத்தி அம்மன் பேசுவது ஆன்மிகமா… அரசியலா? #Mookuthiamman

OTT யில் படங்கள் ரிலிசாகும் கலாசாரம் கொரோனாவால் தமிழ்சினிமாவில் பரவலாகி விட்டது. தீபாவளி விருந்தாக ஆர்.ஜே. பாலாஜியின் மூக்குத்தி அம்மன்’ வெளியாகியுள்ளது.

ஆர்.ஜெ.பாலாஜி தனக்கு என ஒருவகை பேர்ட்டன் படங்களை உருவாக்க நினைக்கிறார். அது ஷங்கர் ஃபார்மாவுக்கு கொஞ்சம் தொடர்பு கொண்டதுதான். தனிமனித ஹீரோவுக்கு மாறுபட்ட சாகசத்தால் சமூக பிரச்சனைகளைத் தீர்க்க முயலும் திரைக்கதைகளை அமைப்பார். பாலாஜி கிட்டத்தட்ட அதேதான் ஆனால், அதை தனி மனித ஹீரோயிசத்தோடு மீடியாவையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறார்.  அவர் ஒரு ஆர்.ஜெவாக இருந்து சின்னச் சின்ன விஷயங்களைச் செய்து அதனால், சின்னச்சின்ன நல்ல மாற்றங்கள் கிடைத்தன. அதை பெரிய விஷயத்திலும் அப்ளை பண்ணி பார்க்கிறார்.

மூக்குத்தி அம்மன் பேசுவது ஆன்மிகமா… அரசியலா? #Mookuthiamman

நயன்தாராவின் புது அவதாரம் அம்மன் கெட்டப். தெலுங்கில் சீதை வேஷம் போட்டபோது கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார் நயன்தாரா. ஆனால், அந்தப் படத்தின் அதிரிபுதிரி வெற்றி அவர்களின் வாயை அடைத்தது. தமிழில் பெரும்பாலும் ஹீரோயின் வாய்ப்புகள் மங்கும் அல்லது முடிந்த காலத்தில்தான் அம்மன் வேஷத்துக்கு ஹீரோயின்கள் வருவது வழக்கம். ஆனால், தனி ஹீரோயின் அலையை உருவாக்கிய நயன்தாரா இதில் களமிறங்கியிருப்பது ஆச்சர்யமே.

வெள்ளிமலையைச் சுற்றியுள்ள 11 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அபகரிக்க திட்டமிடும் கார்ப்பரேட் சாமியார். அதைத் தடுக்க நினைக்கும் லோக்கல் சேனல் ரிப்போர்ட்டர். அந்த ரிப்போர்ட்டருக்கு மூனு தங்கச்சி, ஓடிப்போன அப்பா, குடும்பத்தைக் காக்கும் தாத்தா. அதனால், வழக்கமான புராண, பழிவாங்கல், குடும்ப சிக்கல் தீர்க்கும் கதையம்சம் கொண்ட அம்மன் படம் இல்லை என்பது பெரும் ஆறுதல்.

மூக்குத்தி அம்மன் பேசுவது ஆன்மிகமா… அரசியலா? #Mookuthiamman

கதையில் மிகச் சரியான இடத்தில் மூக்குத்தி அம்மன் (நயன்தாரா) எண்ட்ரியும் அதன்பின் அதிசயங்களால் அல்லாது ஒரு மனிதனின் முயற்சியால் சில மாற்றங்கள் என நகர்த்தியிருப்பது நல்ல விஷயம்.

இடைவேளை வரை ஒருவழியாக தொய்வில்லாமல் செல்கிறது திரைக்கதை. ஆனால், அதற்குப் பிறகு சொல்வதற்கு நிறைய இருக்கு… எப்படிச் சுருக்கிச் சொல்வது என்ற பதற்றத்தில் ஓட்டியிருக்கிறார்கள். அதன்விளைவு கார்ப்பரேட் சாமியாரின் வலைபின்னல் பற்றிய விவரிப்பே இல்லை. மாறாக, அந்தப் போலி சாமியார் வழக்கமான ஒரு வில்லன் போன்ற சித்தரிப்பு இருக்கிறது. ஆனாலும், இதை நகர்த்தி வைத்துவிட்டுகூட படத்தை ரசிக்கலாம். ஏனெனில், பாலாஜி மாற்று சினிமா எடுப்பதாகச் சொல்லிக்கொள்வதில்லை. கமர்ஷியல் சினிமாவில் கொஞ்சம் லேசாக சமூக அக்கறை அவ்வளவுதான் அவர் ஏரியா.

மூக்குத்தி அம்மன் பேசுவது ஆன்மிகமா… அரசியலா? #Mookuthiamman

பாபா சாமியாராகக் காட்டப்படும் காட்சிகளும் யானை கொல்லப்படுவது, காடு அழிப்பது என்பது நிஜத்தில் சிலரோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. அவர் பற்றி பல காட்சிகள் துணிச்சலானவையே. காரணம், பாலாஜி வேலை செய்யும் லோக்கல் சேனல் முதலாளி சொல்லும் காரணமே.

சாகசங்களால் வேலையை எளிதாக முடிக்கும் அம்மனாக இல்லாமல், பாலாஜியை வைத்து தீர்வை நோக்கிச் செல்வதால் பிரச்சனையை ஆடியன்ஸ்க்குச் சொல்வதற்கு இடம் கிடைக்கிறது.

படம் பிராதனமாக முன்னிருத்துவது ஆன்மிகமா… அரசியலா.. எனும் கேள்வி ரொம்ப முக்கியமானது. பெயரில் அம்மனை வைத்திருந்தாலும், அரசியல் சமூக பிரச்சனையைத் தீர்க்க உதவவே அம்மன் பயன்பட்டிருக்கிறார். இன்னும் சொன்னால் சாமியை வேணும்னாலும் நம்புங்க… சாமியாரை நம்பாதீங்க என்பதைத்தான் ஒரு வரியாகச் சொல்கிறது. அதுவும் ஒன்ரறை லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் பிரச்சனையை உடைத்து பேச முயல்கிறது.

மூக்குத்தி அம்மன் பேசுவது ஆன்மிகமா… அரசியலா? #Mookuthiamman

லாஜிக் மிஸ்ஸாவது ஏராளமான இடங்களில். பாலாஜியை சென்னையில் உள்ள ஒரு சேனல் நிகழ்ச்சி நடத்தக் கூப்பிடுவது, முதல் வாரத்தில் அந்தச் சாமியாரை வெச்சி செய்தாலும் அடுத்தடுத்த வாரங்களுக்கு அந்த நிகழ்ச்சிக்கு அவர் வருவதும் நம்பக்த்தன்மையை குலைக்கின்றன. மேலும், கார்ப்பரேட் வலைப்பின்னலில் ஆசிரமத்திற்கு நுழைந்த பாலாஜி குடும்பம் சட்டென்று அவரோடு நெருங்கி பணிவிடை செய்யவிடுவது… அங்கே நடப்பதைப் பதிவுசெய்வது என… எளிதாகச் செய்வதாகக் காட்டுவது… கஷ்டம்தான் பாஸ். சில நேரங்களில் இது சுந்தர் சி படம் பார்ப்பதுபோலாக்கி விடுகிறது.

நயன்தாரா – பாலாஜி இருவரின் ஆக்கிரமிப்பில் நகர்கிறது படம். சண்டைக்காட்சிகளில் நயன்தாராவுக்கே வாய்ப்பளிப்பது புத்திச்சாலித்தனம். ஆனாலும், பழைய படங்களின் ஹீரோ, ஹீரோயினின் மனசாட்சி வந்து பேசுவதுபோல அவர் வந்து செல்வதான காட்சிகள் சொதப்பல்.

படத்தில் நயன்தாரா, பாலாஜிக்கு அடுத்து ஊர்சியை ஈர்க்கிறார். பல முறை அவர் செய்த பாத்திரம்தான் என்றாலும் பின்னணி காட்சிகளால் ஸ்கோர் செய்திருக்கிறார். பாலாஜியின் மூத்த தங்கையிடம் வரம் கேட்கச் சொல்லி கேட்கும்போது, ‘தினம் சமைச்சு போடறேன்… ஒரு நாள் லீவ் வேணும்’னு கேட்பது டச்சிங். தொடக்கத்தில் இந்துஜாவை[ பெண் பார்க்கச் செல்லும்போது தன்னைப் பற்றி உண்மைச்சொன்னதும் ‘இப்படி வெளிப்படையாகப் பேசினதுக்கு ஓகே சொன்னா, இரண்டு நாள் சந்தோஷமா இருக்கும். ஆனா, ‘நோ’ சொல்லியிருக்கலாமோன்னு வாழ்க்கை முழுக்க தோனும் என சொல்வது செம. மெளலி கேரக்டர் இல்லாட்டியும்கூட ஒண்ணுமில்ல என்பதாகவே இருக்கிறது. அதேபோல கடைசி தங்கச்சியின் கிறிஸ்துவப் பழக்கம் பின்பற்றல். கிறிஸ்துவ பள்ளிகளில் மதமாற்றம் என அதை நெகட்டிவாகப் பலரும் புரிந்துகொள்ளக்கூட வாய்ப்பிருக்கிறது.

மூக்குத்தி அம்மன் பேசுவது ஆன்மிகமா… அரசியலா? #Mookuthiamman

பகபவதி பாபாவாக வரும் அஜய் கோஷ் தனக்கான வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். கிரீஷ் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடல் பழைய ட்யூன்தான் என்றாலும் கேட்க நன்றாக இருந்தது. வெள்ளிமலை பகுதியைக் காட்சிப்படுத்தியதில் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ். நடிப்பத்தோடு என்.ஜெ.சரவணனோடு இயக்கத்திலும் களம் குதித்திருக்கிறார் பாலாஜி. ஏமாற்றமில்லை.

தன் ஏரியா கமர்ஷியல்தான் என்றாலும், அரசியலை, சமூக கேட்டுக்கு காரணமானவர்களைப் பகடி செய்வது அதாவது spoof செயவதைப் போல எடுப்பது ரசிக்க வைப்பதோடு, கவனிக்கவும் வைக்கிறது.