‘குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000; குடும்ப தலைவர் பெயரை மாற்ற தேவையில்லை’ : முக்கிய அறிவிப்பு வெளியானது!!

‘குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000; குடும்ப தலைவர் பெயரை மாற்ற தேவையில்லை’ : முக்கிய அறிவிப்பு வெளியானது!!

திமுக தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 ஊக்கத் தொகையாக மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவித்தது. இதை தொடர்ந்து திமுக ஆட்சியைப் பிடித்த நிலையில் பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வந்தன. இருப்பினும் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 ஊக்கத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்த சூழலில் தமிழக நிதிநிலை அறிக்கை இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் துறைவாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

‘குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000; குடும்ப தலைவர் பெயரை மாற்ற தேவையில்லை’ : முக்கிய அறிவிப்பு வெளியானது!!

*பணியின் போது உயிரிழக்கும் அரசு பணியாளர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் உதவி மானியம் 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும்.

* விளையாட்டு மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு ரூ.225 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது

* விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்து தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி செலவில் விளையாட்டு அரங்கம் நிறுவப்படும்

* மசூதிகள் மற்றும் தேவாலயங்களை புதுப்பிப்பதற்காக தலா 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

‘குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000; குடும்ப தலைவர் பெயரை மாற்ற தேவையில்லை’ : முக்கிய அறிவிப்பு வெளியானது!!

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீடு 4,142 ஆக உயர்த்தப்படுகிறது

* பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு

* குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தின் நோக்கம் இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்குவதேயாகும்; இதற்காக குடும்ப தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை. இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்து அமல்படுத்தப்படும்.

* கருவூலங்கள் விரிவுபடுத்தப்பட்டு அரசு, உள்ளாட்சி அமைப்புகள் பணம் செலுத்தும் வங்கிகளாக மாற்றம் செய்யப்படும்