நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப். 14 முதல் அக்.1ஆம் தேதி வரை நடைபெறும்

 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப். 14 முதல் அக்.1ஆம் தேதி வரை நடைபெறும்

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப். 14ஆம் தேதி முதல் அக்.1ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை காலை 9 மணிக்கும், மாநிலங்களவை பிற்பகல் 3 மணிக்கும் கூடுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 18 நாள் அமர்வின்போது விடுமுறை அல்லது வார விடுமுறை இல்லாமல் தொடர்ந்து செயல்பட கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப். 14 முதல் அக்.1ஆம் தேதி வரை நடைபெறும்

மக்களவை மற்றும் மாநிலங்களவை தலா 18 அமர்வுகளாக நடைபெறவுள்ளது.கொரோனா வைரஸ், எல்லையில் சீன ஊடுருவல், பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. அதேசமயம் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு தீவிரமாக உள்ளது.