ம,பிரதேசத்தில் பள்ளி வளாகத்தில் காந்தி சிலை உடைப்பு.. பா.ஜ.க.வின் குரங்குகள் சேதப்படுத்தியதா?… காங்கிரஸ் கேள்வி

ம,பிரதேசத்தில் பள்ளி வளாகத்தில் காந்தி சிலை உடைப்பு.. பா.ஜ.க.வின் குரங்குகள் சேதப்படுத்தியதா?… காங்கிரஸ் கேள்வி

மத்திய பிரதேசத்தில் பள்ளி வளாகத்தில் காந்தி சிலையை குரங்குகள் சேதப்படுத்தியதாக போலீசார் கூறியதற்கு, பா.ஜ.க.வின் குரங்குகளை போலீசார் குறிப்பிடுகின்றனரா என்று காங்கிரஸ் கேள்வி கேட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் மாண்ட்சவுர் மாவட்டத்தில் குர்ஜர்பார்டியா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. கடந்த புதன்கிழமையன்று அந்த சிலை சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிலை சேதப்படுத்தப்பட்ட தகவல் அறிந்து போலீசார் அங்கு விசாரணை நடத்தினர்.

ம,பிரதேசத்தில் பள்ளி வளாகத்தில் காந்தி சிலை உடைப்பு.. பா.ஜ.க.வின் குரங்குகள் சேதப்படுத்தியதா?… காங்கிரஸ் கேள்வி
சிலை சேதமடைந்ததை பார்வையிடும் போலீசார்

இந்த சம்பவம் தொடர்பாக மாண்ட்சவுர் எஸ்.பி. சித்தார்த் சவுத்ரி கூறுகையில், பள்ளி எல்லையை யாரும் தாண்டவில்லை மற்றும் பள்ளி வாட்ச்மேனும் இரவு 8 மணி வரை பணியில் இருந்தார். ஏற்கனவே, அந்த சிலையில் கையை குரங்குகள் உடைத்ததாகவும் பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனால் இது (சிலை சேதம்) குரங்குகளால் நடந்து இருக்கலாம்.

ம,பிரதேசத்தில் பள்ளி வளாகத்தில் காந்தி சிலை உடைப்பு.. பா.ஜ.க.வின் குரங்குகள் சேதப்படுத்தியதா?… காங்கிரஸ் கேள்வி
பா.ஜ.க.

சிலை சேதப்பட்டுள்ளது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற கோணங்களிலும் வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது என தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் தீபக் சிங் சவுகான் கூறுகையில், தேசத்தின் தந்தை சிலையை சேதப்படுத்தியது ஒரு மிகப்பெரிய குற்றம். மாண்ட்சவுர் எஸ்.பி. சிலையை குரங்கள் சேதப்படுத்தியாக கூறினார், பா.ஜ.க.வின் குரங்குகளைதான் அவர் குறிப்பிட்டாரா? என்று கேள்வி எழுப்பினார்.