க்ளினிக்கில் புகுந்தனர் ,பணத்தை ஆட்டைய போட்டனர் -நோயாளிபோல வந்து டாக்டரிடம் 3 லட்சம் பணம் நகை கொள்ளை ..

க்ளினிக்கில் புகுந்தனர் ,பணத்தை  ஆட்டைய போட்டனர்  -நோயாளிபோல வந்து டாக்டரிடம் 3 லட்சம் பணம் நகை கொள்ளை ..

ஒரு முதிய டாக்டரின் க்ளினிக்கிற்குள் நோயாளி போல வந்து அவரிடமிருந்த நகை பணத்தையெல்லாம் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீஸ் தேடுகிறது.

க்ளினிக்கில் புகுந்தனர் ,பணத்தை  ஆட்டைய போட்டனர்  -நோயாளிபோல வந்து டாக்டரிடம் 3 லட்சம் பணம் நகை கொள்ளை ..

ஹரியானா மாநிலம் குருகிராமில் டாக்டர் வேத் பிரகாஷ் டாண்டனின் என்பவர் தன்னுடைய வீட்டிலேயே க்ளினிக் நடத்தி வருகிறார் .இவருடைய மனைவியும் ஒரு டாக்டர் ஆவார் ,அவரும் வீட்டிலேயே க்ளினிக் நடத்தி மக்களுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார்கள் .இந்நிலையில் சென்ற வாரம் மாலையில் அவரின் க்ளினிக்கிற்கு ஒரு கொள்ளையன் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு நோயாளி போல அவரின் க்ளினிக்கிற்கு வைத்தியம் பார்க்க வந்தார் .

க்ளினிக்கில் புகுந்தனர் ,பணத்தை  ஆட்டைய போட்டனர்  -நோயாளிபோல வந்து டாக்டரிடம் 3 லட்சம் பணம் நகை கொள்ளை ..

அப்போது அந்த டாக்டர் அவரை உண்மையிலேயே நோயாளி என நம்பி அவருக்கு வைத்தியம் பார்த்து சில மருந்துகளையும் கொடுத்துள்ளார் .மருந்து கொடுத்த பிறகும் அவர் அங்கிருந்து போகாததால் டாகடர் அவரை கிளம்புங்கள் என்று கூறினார் ,உடனே அந்த நபர் க்ளினிக்கிற்கு வெளியே நின்றிருந்த மேலும் இரு கொள்ளையர்களை க்ளினிக்கிற்குள் அழைத்தார் ,உடனே உள்ளே ஓடி வந்த அந்த கொள்ளையர்கள் அவரோடு சேர்ந்து கொண்டு டாக்டர் தம்பதியை கட்டிப்போட்டு விட்டு அங்கிருந்த 3 லட்சம் பெறுமான  நகைகள் ,பணம் உள்ளிட்டவைகளை கைப்பற்றிக்கண்டு ஓடிவிட்டனர் .பிறகு அந்த டாக்டர் தம்பதிகள் கத்தி கூச்சல் போட்டதும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ஓடிவந்து அவர்களை காப்பாற்றி போலீசுக்கு தகவல் சொன்னார்கள் .விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகிறார்கள் .