புத்தாண்டையொட்டி மதுபான கடைகளில் கோடிக் கணக்கில் கொட்டிய பணமழை...! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainபுத்தாண்டையொட்டி மதுபான கடைகளில் கோடிக் கணக்கில் கொட்டிய பணமழை...!

alcohol
alcohol

நியூ இயர், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பொதுவாக மது விற்பனை அமோகமாக நடைபெறும். இதற்காக மதுபான கடைகளில் பல வகையான மதுபானங்கள் விற்கப்படும். இந்த புத்தாண்டிற்கு ஒரு நாள் முன்னரே மது விற்பனை அமோகமாக இருந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர். 

ttn

இது குறித்துப் பேசிய டாஸ்மாக் அதிகாரி, ஒவ்வொரு ஆண்டும் நடப்பதைப் போலவே இந்த ஆண்டும் மது  விற்பனை அதிகமாக நடைபெற்றது. விற்பனை அதிகமாகும் என்று முன்கூட்டியே அறிந்திருந்ததால், அதற்குத் தேவையான மது பாட்டில்களை வைத்திருந்தோம். 29 மற்றும் 31 ஆம் தேதி இரவு கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், கிண்டி, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில்தியேட்டர்களில் கூடுவதை போல கூட்டம் வந்து விட்டது. கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் விற்பனையாளர்கள் திணறினர். 31 ஆம் தேதி இரவு மட்டும் மது விற்பனை 3 மடங்கு அதிகரித்தது. 

ttn

தமிழ்நாடு முழுவதுமாக டிச.1 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி ரூ.350 கோடிக்கு மது விற்பனையானது. அதே போல கிறிஸ்துமஸ் அன்றும் ரூ.100 கோடிக்கு மது விற்பனை ஆனது. கடந்த ஆண்டு மொத்தமாகவே ரூ.300 கோடிக்கு தான் மது விற்பனை நடந்தது. ஆனால், இந்த ஆண்டு சுமார் ரூ.450 கோடி அளவிற்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.