மதிய உணவுக்கு பதிலாக நாளை முதல் பணம்: புதுச்சேரி அரசு முடிவு!

 

மதிய உணவுக்கு பதிலாக நாளை முதல் பணம்: புதுச்சேரி அரசு முடிவு!

பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுக்கு பதிலாக பணம் வழங்க புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாது என கூறப்படுகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, தமிழக அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் வரை முட்டை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதே சூழல் தான் புதுச்சேரியிலும் நிலவுகிறது.

மதிய உணவுக்கு பதிலாக நாளை முதல் பணம்: புதுச்சேரி அரசு முடிவு!

இந்த நிலையில், மதிய உணவுக்கு பதிலாக மாணவர்களின் பெற்றோர்களிடம் பணமாக கொடுக்க புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்.18 ஆம் தேதி வரையில் மதிய உணவுக்கு பதிலாக பணம் வழங்கப்படும் என்றும் பெற்றோர்கள் நேரில் சென்று ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

மேலும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ரூ.299 வழங்கப்படும் என்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ரூ.390 வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.