சோமவார விரதம்: கணவன் மனைவி சச்சரவுகள் நீங்க!

 

சோமவார விரதம்: கணவன் மனைவி சச்சரவுகள் நீங்க!

மனபிரச்னையால் பிரிந்த கணவன் மனைவி மற்றும் உற்றார் உறவினர் ஒன்று சேர்ந்து வாழ சோம வாரப் பூஜை செய்துவந்தால் விரைவில் ஒன்று சேர்வர்.

சோமனான சந்திர பகவான் இவ்விரத்தை பின்பற்றி நற்கதி பெற்ற விரதமாயின் இது சோமவார விரதம் என்றழைக்கப்படுகிறது.

சிவபெருமானுக்கு இருக்கும் விரதங்களில் மகத்துவம் வாய்ந்த விரதமானது இந்த சோமவார விரதம். இவ்விரதத்தை பெரும்பாலானோர் கார்த்திகை மாத திங்கள் கிழமைகளில் மட்டுமே இருக்கின்றனர். எல்லா திங்கள் கிழமைகளிலும் இந்த விரதம் இருக்கலாம்.

சோமவார விரதம்: கணவன் மனைவி சச்சரவுகள் நீங்க!


பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர விரும்பினால் மனதை ஒருநிலைப்படுத்தி 21 திங்கள் கிழமை விரதம் இருந்தால் மனம் மாறி இல்லறம் நல்லறமாக மாறும். மேலும் மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம், நீங்கும். இவ்விரதமுறையில் பெரியவர்களின் ஆசீர்வாதம் மிக முக்கியமானதாாகும்.

சோமவார விரதம்: கணவன் மனைவி சச்சரவுகள் நீங்க!

பெற்றோரிடமோ அல்லது மாமனார் மாமியாரிடமோ இது எதுவுமே இல்லை என்போர் வயதான தம்பதியரிடம் ஆசீர்வாதம
வாங்கிக்கொள்ளலாம்.

                           சோமவார விரதம் புராணம்:- 

சாபத்தினால் ஒளியிழந்த சோமனான சந்திரன் சோமாவார விரதம் இருந்தபோது எம்பெருமான் காட்சியளித்ததோடு தேய்ந்து கீழே விழும் சந்திரனை தன்னுடைய இருகாரங்களாலும் காப்பாற்றி பிறைச்சந்திரனாக தலையில் சூடிக்கொண்டார் எம்பெருமான். பிறகு, சந்திரன் வளரும் நிலையையும் பெற்றான். அதுவே, தற்போது பௌர்ணமி, அமாவாசை என்றழைக்கப்டுகிறது.

சந்திரனைச் சூடியதால் எம்பெருமான் சந்திரசேகரன், சந்திமௌலீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவ்விரதமுறையில் பகலில் உண்ணாமல் காலை மற்றும் மாலை வேளையில் சிவலாயம் சென்று வழிபடவேண்டும்.

சோமவார விரதம்: கணவன் மனைவி சச்சரவுகள் நீங்க!

இவ்விரதத்தில் முக்கியமானது தான தர்மம். தன்னால் முடிந்தளவுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இரவில் உணவருந்தி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும்.
இத்தினத்தில் கணவன் மனைவி இணைந்து சிவாலயம் சென்று வந்தால் சிறப்பான பலனகளை பெறலாம்.

இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் ஆயுள்விருத்தி, மனஅமைதி, ஐஸ்வர்யம், தகுந்த துணையுடன் கூடிய நல்ல வாழ்க்கை கிடைக்கும்.

சோமவார விரதம்: கணவன் மனைவி சச்சரவுகள் நீங்க!

இவ்விரதத்தில் சந்திரனைத் தலையில் சூடிய சந்திரசேகர மூர்த்தி வழிபாடு செய்யப்படுகிறார்.

திங்கட்கிழமைகளில் சிவனை மனமார வேண்டி விரதமிருந்து அவருக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைப்பது சிறந்தது. அதோடு, எம்பெருமானுக்கு விரதம் இருந்தால் பல நலன்களை பெறலாம்