“இரண்டாயிரம் பெண்களோட …..”ஒரு பாலியல் குற்றவாளிக்கு நேர்ந்த கதி

 

“இரண்டாயிரம் பெண்களோட …..”ஒரு பாலியல் குற்றவாளிக்கு நேர்ந்த கதி

ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றவாளிக்கு 2000 பெண்களின் துணிகளை துவைத்து கொடுக்க ஒரு நீதிபதி உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார் .

“இரண்டாயிரம் பெண்களோட …..”ஒரு பாலியல் குற்றவாளிக்கு நேர்ந்த கதி

பீகார் மாநிலம்  மதுபானி மாவட்டத்தில் லவுகஹா  கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான லலன் குமார் என்ற வாலிபர் வசித்து வந்தார் .அவர் கடந்த  ஏப்ரல் 17 அன்று இரவு தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய  முயன்றார். அதன் பிறகு அந்த பெண் அவரிடமிருந்து தப்பித்து வந்து  அந்த குற்றவாளிக்கு எதிராக போலீசில் புகார் தந்தார் .பின்னர் போலீசார் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து ஏப்ரல் 19 அன்று லாலன் கைது செய்யப்பட்டார். அப்போதிலிருந்து அவர் சிறையில் இருக்கிறார் .

இந்நிலையில் அந்த லாலன் தன்னுடைய வக்கீல் மூலம் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் .அப்போது நீதிபதி அவரிடம் ஆறு மாத காலம் தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் 2000 பெண்களின் துணிகளை துவைத்து கொடுத்தால் ஜாமீன் கொடுப்பதாக கூறினார் .அதற்கு லாலன் சம்மதித்ததும் ,அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது .

மேலும் முதலில் அவர் 425 பெண்களின் துணிகளை துவைக்க சோப்பு ,மற்றும் பொருட்களை அவரே வாங்கி கொள்ள உத்தரவிடப்பட்டது .அதன் பிறகு படிப்படியாக அந்த ஊரில் உள்ள  2000 பெண்களின் துணிகளை தினமும் துவைப்பது என்று அந்த ஜாமீனில் குறிப்பிடப்பட்டுள்ளது .அவரின் இந்த பணியை கண்காணிக்க அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர்  நியமிக்கப்ட்டுள்ளார் .அதன் பிறகு ஜாமீனில் வந்த லாலன் தன் பணிகளை துவங்கினார்