’உட்சபட்ச வேதனை’ கேரளாவின் அடுக்கடுக்கான துயரம் பற்றி மோகன்லால்

 

’உட்சபட்ச வேதனை’ கேரளாவின் அடுக்கடுக்கான துயரம் பற்றி மோகன்லால்

கேராளாவுக்குச் சோதனை மேல் சோதனைகளாகவே வந்துகொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டு கனமழையால் கேரளாவே மூழ்கியது. அதிலிருந்து மீண்டது. பின், கொரோனா பாதிப்பு தொடக்கத்தில் அதிகம் இருந்தது கேரளாவில்தான். அதையும் ஒருவழியாகத் தாக்குபிடித்து முன்னேறி வந்தந்து.

நேற்று இரவு துபாய் நாட்டிலிருந்து கோழிக்கோடுக்கு வந்த விமானம், தரை இறங்குவதில் சிக்கலானது. திடீரென்று விபத்துக்கு உள்ளானது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 5 விமான பணியாளர்கள் உட்பட 174 பேர் இருந்தனர். அவர்களில் இதுவரை 19 பேர் இறந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள். இறந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் மற்றவர்கள் தனிமைப்படுத்தப் பட்டு வருகிறார்கள்.

’உட்சபட்ச வேதனை’ கேரளாவின் அடுக்கடுக்கான துயரம் பற்றி மோகன்லால்
Kozhikode: An Air India Express flight with passengers on board en route from Dubai skidded off the runway while landing, in Kozhikode, Friday, Aug. 7, 2020. (PTI Photo)(PTI07-08-2020_000238B)

இது ஒருபுறம் என்றால், கேரளாவின் இடுக்கி, மலப்புரம், வயநாடு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் 85-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். இறப்போர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என கணிக்கிறர்கள்.

’உட்சபட்ச வேதனை’ கேரளாவின் அடுக்கடுக்கான துயரம் பற்றி மோகன்லால்

இந்த வேதனை குறித்து மலையாளத்தின் புகழ்பெற்ற நடிகர் மோகன்லான் ட்விட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்,

விமான விபத்து மற்றும் நிலசரிவுகளில் வாழ்க்கை இழந்தவர்களுக்கு அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒருபுறம் கோவிட் 19 பிரச்னைகளைச் சிரமத்துடன் கையாண்டு கொண்டிருக்கும் சூழலில் இந்த துயரம் உட்சபட்ச வேதனையைத் தருகிறது’

என்பதாகப் பதிவிட்டுள்ளார்.