“நீங்க என்னத்த தூக்கி எறிஞ்சாலும் நாங்க தான்டா லீடிங்” – இங்கி. ரசிகர்களை பங்கம் செய்த சிராஜ்!

 

“நீங்க என்னத்த தூக்கி எறிஞ்சாலும் நாங்க தான்டா லீடிங்” – இங்கி. ரசிகர்களை பங்கம் செய்த சிராஜ்!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மற்றொறு போட்டி டிராவில் முடிவடைந்திருக்கிறது. இதன்மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின்போதே இங்கிலாந்து வீரர்கள் இந்திய வீரர்களை சீண்டி பார்த்தனர். இதன் விளைவாக வெற்றியையும் பறிகொடுத்தனர். அந்நாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் இந்திய வீரர்களின் மீது இனவெறுப்பை காட்டினர்.

“நீங்க என்னத்த தூக்கி எறிஞ்சாலும் நாங்க தான்டா லீடிங்” – இங்கி. ரசிகர்களை பங்கம் செய்த சிராஜ்!

லார்ட்ஸ் டெஸ்ட்டிலும் இந்திய அணி வெற்றி பெறும் நிலைக்கு வந்தவுடன், பவுண்டரி எல்லையில் நின்றிருந்த கே.எல்.ராகுல் மீது பாட்டில் கார்க்குகளை ரசிகர்கள் வீசி எறிந்து கேவலமான செயலை அரங்கேற்றினர். தற்போது லீட்ஸ் மைதானத்தில் இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் டோட்டலாக கொலப்ஸ் செய்தனர். இதனால் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

அதற்குப் பின் முதாலாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்கள் பொறுப்புடன் ஆடிவருகின்றனர். இச்சூழலில் தான் இந்திய வீரர் முகமது சிராஜ் மீது இங்கிலாந்து ரசிகர்கள் பந்தை தூக்கி எறிந்த வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. சிராஜ் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது இச்செயல் அரங்கேறியிருக்கிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சைகையில் 1-0 என்பதைக் காட்டியுள்ளார். அதாவது நீங்க என்ன கத்துனாலும் தூக்கி எறிஞ்சாலும் நாங்க தான் லீடிங்ல இருக்கோம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சிராஜ். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.