ஆப்கானிஸ்தான் தலைவராக முகமது ஹசன் நியமனம்

 

ஆப்கானிஸ்தான் தலைவராக முகமது ஹசன் நியமனம்

ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றிய தாலிபான்கள், இன்னும் அதிகாரப்பூர்வமாக ஆட்சி அமைக்கவில்லை. ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களையும் தாலிபான்கள் வசம் சென்றது. தாலிபான் அமைப்பின் கொடி, பஞ்ச்ஷீர் தலைநகரிலும் ஏற்றப்பட்டுள்ளது. ஆட்சி அமைப்பதில் பெருந்தலைகளுக்குள் அதிகார மோதல் ஏற்பட்டதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இதனை தாலிபான்கள் தரப்பு திட்டவட்டமாக மறுத்தது. ஆட்சி அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுவருவதாக தாலிபான்கள் அறிவித்திருந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைவராக முகமது ஹசன் நியமனம்

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசின் புதிய தலைவராக முகமது ஹசன் என தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அரசின் துணை தலைவராக அப்துல் கனி பாரதார் செயல்படுவார் என்றும் உள்துறை அமைச்சராக சிராஜ்தீன் ஹக்கானி செயல்படுவார் என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சராக யாகூப் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.