டி20 உலகக் கோப்பை தொடர் ஒத்தி வைத்தால், பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் ஓய்வும் தாமதம்

 

டி20 உலகக் கோப்பை தொடர் ஒத்தி வைத்தால், பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் ஓய்வும் தாமதம்

இஸ்லாமாபாத்: டி20 உலகக் கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்பட்டால், டி20 போட்டிகளில் தன்னுடைய ஓய்வும் தாமதம் ஆகும் என்று பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் கூறியுள்ளார்.

39 வயதான முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் ஹபீஸ் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்பு தனது 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரத் திட்டமிட்டார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஹபீஸ் ஓய்வு பெற்று விட்டார். ஆனால் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போன்ற போட்டிகளில் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

டி20 உலகக் கோப்பை தொடர் ஒத்தி வைத்தால், பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் ஓய்வும் தாமதம்

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக இந்தாண்டு டி20 உலகக் கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. அவ்வாறு அந்த தொடர் ஒத்தி வைக்கபட்டால் டி20 போட்டிகளில் தன்னுடைய ஓய்வும் தாமதம் ஆகும் என்று பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் கூறியுள்ளார்.