தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மோடி

 

தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மோடி

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இன்று தமிழ் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமான இன்று கேரள மக்களும் விசு பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மோடி

புத்தாண்டு தினத்தை ஒட்டி மக்கள் புத்தாடை அணிந்து , கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு வருகின்றனர். வீடுகளில் பலகாரங்கள் செய்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து தங்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று காலை முதலே சென்னையில் பல கோவில்களில் மக்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்து வருகிறார்கள், இருப்பினும் பல இடங்களில் கொரோனா காரணமாக சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மோடி

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்தில் , “தமிழகத்து சகோதர சகோதரிகளுக்கும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் நிறைக்க இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.