10,000 மணவர்களுடன் மோடி பேசும் ’ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’

 

10,000 மணவர்களுடன் மோடி பேசும் ’ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’

மாணவர்களுக்கு இந்திய அளவில் நடத்தப்படும் புதுவிதமான போட்டிதான் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்.

நமது அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சில சிக்கல்களுக்குத் தீர்வுகாண, மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய நாடுதழுவிய ஒரு ஏற்பாடாக இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நடத்தப்படுவதுடன்,  புதுமையான பொருட்களைக் கண்டுபிடிக்கும் கலாச்சாரத்தை கற்பிக்கும் விதமாகவும், சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் மனநிலையை உருவாக்கும் நோக்கத்துடனும் நடத்தப்படுகிறது.

10,000 மணவர்களுடன் மோடி பேசும் ’ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’

2017 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் 42,000 மாணவர்கள் பங்கேற்றனர். 2018 ஆம் நடந்த போட்டியில் 1 லட்சம் பேராக எண்ணிக்கை உயர்ந்தது.2019 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 2 லட்சம் பேராகவும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்தது.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-ன் முதல் சுற்றில், 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.  இந்த ஆண்டுக்கான மென்பொருள் பிரிவினருக்கான மாபெரும் இறுதிப்போட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து போட்டியாளர்களும் ஆன்லைன் வாயிலாக பங்கேற்கும் விதமாக, அதற்கென உருவாக்கப்பட்ட அதிநவீன சிறப்பு அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மத்திய அரசின் 37 துறைகள், 17 மாநில அரசுகள் மற்றும் 20 தொழில் நிறுவனங்கள் கொடுத்துள்ள 243 பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான போட்டியில், 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

10,000 மணவர்களுடன் மோடி பேசும் ’ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’

ஆகஸ்ட் 1 அன்று நடைபெறவுள்ள ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-ன் மாபெரும் இறுதிச் சுற்றில், பிரதமர் நரேந்திரமோடி, காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்.  இந்த நிகழ்ச்சியையொட்டி, மாணவர்களுடனும் அவர் கலந்துரையாட உள்ளார்.