சுகாதாரத்துறை நடவடிக்கையால் குணமடையும் நோயாளிகளின் விகிதம் அதிகரித்துவருகிறது- பிரதமர்

 

சுகாதாரத்துறை நடவடிக்கையால் குணமடையும் நோயாளிகளின் விகிதம் அதிகரித்துவருகிறது- பிரதமர்

இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 40 லட்சத்து 5ஆயிரத்து 581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 5 லட்சத்து 93ஆயிரத்து 900பேர் பலியாகி உள்ளனர். மேலும் 83லட்சத்து 23ஆயிரத்து 463பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை ஒரு கோடியே 20 ஆயிரத்து 644ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 6,44,172 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,777 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை நடவடிக்கையால் குணமடையும் நோயாளிகளின் விகிதம் அதிகரித்துவருகிறது- பிரதமர்

ஐநாவின் ECOSOC உயர்நிலை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “கடந்த 6 ஆண்டுகளில் 40 கோடி வங்கி கணக்குகளை தொடங்கி வைத்துள்ளோம். சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுவதால் குணமடையும் நோயாளிகளின் விகிதம் அதிகரித்துவருகிறது. குடிமக்கள் அனைவருக்கும் வீடுகட்டி தரும் திட்டத்தை நிறைவேற்ற எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தியாவின் சுகாதார முறைகள், பிற உலக நாடுகளில் இருப்பதை விட சிறப்பாக உள்ளது. முக்கியமான தருணத்தில் ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா இடம் பிடித்திருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி இருக்கிறோம். மாநில அரசுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முக்கிய பிரதிநிதிகளாக அங்கம் வகித்து நாட்டின் வளர்ச்சிக்கு கை கொடுத்துள்ளனர். குடிமக்கள் அனைவருக்கும் வீடு கட்டி தடும் திட்டத்தை நிறைவேற்ற எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மூலம் பலரது வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.