“புல்லாங்குழலும் இருக்கு, சுதர்சன சக்கரமும் இருக்கு”.. லடாக்கில் பிரதமர் மோடியின் உற்சாகப் பேச்சு!

“புல்லாங்குழலும் இருக்கு, சுதர்சன சக்கரமும் இருக்கு”.. லடாக்கில் பிரதமர் மோடியின் உற்சாகப் பேச்சு!

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்தனர். அதே போலச் சீன ராணுவத்தில் 35 வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் கொடுத்தது.

“புல்லாங்குழலும் இருக்கு, சுதர்சன சக்கரமும் இருக்கு”.. லடாக்கில் பிரதமர் மோடியின் உற்சாகப் பேச்சு!

அத்துமீறி சீன ராணுவம் நடத்திய இந்த திடீர் தாக்குதலையடுத்து இந்திய- சீன எல்லையான லடாக்கில் பதற்றம் நிலவி வருகிறது. அதனால் படுகாயம் அடைந்த வீரர்களிடம் நலம் விசாரிப்பதற்கும் பதற்றமான சூழல் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கும் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தலைவர் பிபின் ராவத்துடன் திடீர் பயணம் மேற்கொண்டார்.

“புல்லாங்குழலும் இருக்கு, சுதர்சன சக்கரமும் இருக்கு”.. லடாக்கில் பிரதமர் மோடியின் உற்சாகப் பேச்சு!

அங்கு ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய வீரர்களின் மன உறுதி மலையைப் போலப் பலமாக இருப்பதாகவும் தேவைப்பட்டால் எதிரிகளைக் களத்தில் சந்திக்கத் தயார் என்றும் லடாக்கில் பயங்கரவாதத்தை உருவாக்க நடந்த சதிகள் தேசபக்தி நிறைந்த மக்களால் முறியடிக்கப்பட்டதாகவும் கூறினார். தொடர்ந்து, நாம் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர்கள் தான் என்றாலும் நம்மிடம் சுதர்சன சக்கரமும் இருக்கிறது என்றும் நாட்டின் நிலப்பரப்பை அதிகரிக்கப் பேராசையுடன் செயல்பட்டவர்கள் தான் எப்போதும் வீழ்ச்சி அடைந்துள்ளார்கள் என்று கூறி,

“மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு”, என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார்.