Home இந்தியா 21 ஆம் நூற்றாண்டு மாணவர்களுக்காகவே புதிய கல்விக்கொள்கை- பிரதமர் மோடி

21 ஆம் நூற்றாண்டு மாணவர்களுக்காகவே புதிய கல்விக்கொள்கை- பிரதமர் மோடி

உலகிலேயே முதன்முறையாக நடத்தப்படும் ஆன்லைன் ஹேக்கத்தான் இறுதிச்சுற்றில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக மாணவர்களிடம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். புதுமையான பொருட்களை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஹேக்கத்தான் நடத்தப்படுகிறது

21 ஆம் நூற்றாண்டு மாணவர்களுக்காகவே புதிய கல்விக்கொள்கை- பிரதமர் மோடி

21 ஆம் நூற்றாண்டு மாணவர்களுக்காகவே புதிய கல்விக்கொள்கை- பிரதமர் மோடி

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020ன் இறுதிச்சுற்றில் உரையாற்றிய பிரதமர் மோடி, “உலகத்தரத்தில் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அனைவருக்குமான சுகாதார வசதியை ஏற்படுத்த வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் கிராமப்புறங்களில் மாற்றங்களை உருவாக்கி வருகிறது. இளைஞர்கள் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன். சவாலான காலகட்டத்தை மாணவர்கள் வெற்றிகரமாக கடந்து வருவார்கள். மழைப் பொழிவை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் குறித்து கோவை மாணவி தெரிவித்தது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

நமது கல்வி நடைமுறையை அதிநவீனமயமாக்க முன்னுரிமை முயற்சிக்கப்படுகிறது. இந்தியாவில் தரமான கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டில் இளைஞர்களின் வளர்ச்சியை மனதில் வைத்தே கல்வி கொள்கை கட்டமைப்பு ஆகும். இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டு அறிவின் யுகம் அறிதல் ஆராய்ச்சி, கண்டுபிடித்தல் ஆகிய மூன்றுமே முக்கிய நோக்கமாகும். புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்களுக்கான பாடசுமை குறைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை மூலம் கல்வி முறையில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன. வெறும் பாடத்தின் அறிவு மட்டும் மனிதனை உருவாக்கிவிடாது” எனக் கூறினார்.

21 ஆம் நூற்றாண்டு மாணவர்களுக்காகவே புதிய கல்விக்கொள்கை- பிரதமர் மோடி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

2 முக்கிய விக்கெட்டுகள்… திணறும் இந்தியா… பதறும் ரசிகர்கள் – மழையால் மீண்டும் சோதனை!

சமீப ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் மீதான மக்களின் ஆர்வம் குறைந்துகொண்டே போவதால், டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்தத் தொடர் 2019ஆம்...

ஜூன் 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய சூர்யா வேண்டுகோள்! ஒரே தேர்வு முறைக்கு முடிவுகட்ட அழைப்பு

அரசுப்பள்ளியில் படித்து உயர் கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ’கல்வியே ஆயுதம்’. ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் பணம் படைத்தவர்கள் ஒரு விதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற...

“இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்… 5ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்” – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டார்.

’’இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல்’’

தனக்கென்று வாழாத தலைவன், ஏழை எளிய மக்களின் தலைமகன். தனக்கும், தனது குடும்பத்திற்கும் எதிராக பரப்பப்படும் வெறுப்பை, கேலிகளை, பொய்களை புன்னகையால் எதிர்கொள்ளும் பண்பாளன் அன்பும்,எளிமையும்,நேர்மையும் அவர் அடையாளம். இந்த...
- Advertisment -
TopTamilNews