ஊரடங்கு முடிந்தாலும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்- பிரதமர் மோடி

 

ஊரடங்கு முடிந்தாலும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்- பிரதமர் மோடி

பொதுமுடக்கம் இல்லாத காலங்களில் தான் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி 66ஆவது முறையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது லடாக் எல்லை பிரச்னை குறித்து பேசிய அவர், இந்தியாவுக்கு நட்பு பாராட்ட தெரியும் அதே நேரத்தில், தேவைப்பட்டால் எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கவும் தெரியும் என்றார். அதனை லடாக் எல்லையில் உள்ள நம் வீரர்கள் நிரூபித்துள்ளனர் என்றும் தெரிவித்தார். இந்தியாவுடன் யாரும் மோத முடியாது என்று கூறிய பிரதமர் நமது எல்லைகள் பாதுகாக்கப்படும் என்று உறுதிபட தெரிவித்தார். மேலும் லடாக்கில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தேசம் தலை வணங்குகிறது என்றும் அவர்களின் தியாகம் என்றும் நினைவில் கொள்ளப்படும் எனவும் கூறினார்.

ஊரடங்கு முடிந்தாலும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்- பிரதமர் மோடி

கொரோனா பாதிப்பு குறித்து உரையாற்றிய பிரதமர், பொதுமுடக்கம் முடிவடைந்தாலும் மக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். முகக்கவசம் அணியவில்லை, தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க இல்லை என்றால், உங்களுடன் சேர்த்து மற்றவர்களுக்கும் ஆபத்து என்பதை அனைவரும் உணர வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். பல சவால்களில் இருந்து மீண்டு வந்தற்கான வரலாறு நம்மிடம் உள்ளது என்று கூறிய பிரதமர், பொதுமுடக்கம் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் மக்கள் மிக கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.